psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

 வளையோசை கலகலவென…

🕉️ அம்பாள் / தேவி அம்மன்
Originals

🎵 Watch/Listen on YouTube


வளையோசை கலகலவென ஒலிக்குதே! -எங்கும்

வண்ண வண்ண வளையல்களாய் ஜொலிக்குதே ! (2)
 
வந்ததம்மா வந்ததம்மா ஆடிப்பூரமே! (2)
வளையல் சார்த்தி வேண்டிடுவோம் அம்மன் பாதமே
அம்மன் பாதமே…
வளையோசை கலகலவென ஒலிக்குதே! 
 
Charanam 1
——————
 
மலர் விழிக்கு பொருத்தமாக தாமரை நிறத்திலே…
புன்னகைக்குப் பொருத்தமாக முத்து நிறத்திலே (2)

தங்க மேனிக்குப் பொருத்தமாக தங்க நிறத்திலே (2)

மங்கலங்கள் அளிப்பதனால் மஞ்சள் நிறத்திலே…. (2)
 
விதவிதமாய் சார்த்திடுவோம்
வளையல் காப்பென…

தாயெனவே அவளிருப்பா
நமக்கு காப்பென…
 
வளையோசை கலகலவென ஒலிக்குதே! -எங்கும்
வண்ண வண்ண வளையல்களாய் ஜொலிக்குதே ! 
 
வளையோசை கலகலவென ஒலிக்குதே!
 
Charanam 2
——————–
செவ்வாடை பொருத்தமாக சிவப்பு நிறத்திலே…
யோக நிலைக்கு பொருத்தமாக காவி நிறத்திலே (2)

வெள்ளை மனசு பொருத்தமாக வெள்ளை நிறத்திலே …(2)

வேப்பிலைக்குப் பொருத்தமாக பச்சை நிறத்திலே…(2)
 
விதவிதமாய் சார்த்திடுவோம்
வளையல் காப்பென…

தாயெனவே அவளிருப்பா
நமக்கு காப்பென…
 
வளையோசை கலகலவென ஒலிக்குதே! -எங்கும்
வண்ண வண்ண வளையல்களாய் ஜொலிக்குதே ! 
 
வந்ததம்மா வந்ததம்மா ஆடிப்பூரமே! (2)
 
வளையல் சார்த்தி வேண்டிடுவோம் அம்மன் பாதமே
அம்மன் பாதமே…
 
வளையோசை கலகலவென ஒலிக்குதே!