கடன் வாங்கி கல்யாணம்

கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ
வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை ! (2)
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன்
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் !
உடன் வந்து காத்தல் உன் கடனல்லவா ? – எமை
உடன் வந்து காத்தல் உன் கடனல்லவா ?
கோரஸ்:
கோவிந்தனே ! கோவிந்தனே ! – எனும்
கோஷத்தைக் கேட்கின்ற கிரிவாசனே ! (2)
சரணம் – 1
—————-
கண நேர நிகழ்வாகும் உன் தரிசனம் ! – அதில்
பல நேரம் நெகிழ்வாகும் எங்கள் மனம் ! (2)
தொலை தூர நெடும் பயணம்
மலை ஏறி வருகின்றோம்…(2)
கடைக்கண்ணால் நீ பார்த்தால் போதும் ஐயா ! – வரும்
தடை யாவும் உடைந்தோடிப் போகுமய்யா !
கோரஸ்:
கோவிந்தனே ! கோவிந்தனே ! – எனும்
கோஷத்தைக் கேட்கின்ற கிரிவாசனே ! (2)
சரணம் 2_——————
அலை போல மலைமீது திருக்கூட்டமே ! –
உன்சிலை மேனி அதைக் காணும் பெரு நாட்டமே ! (2)
உன் நாமம் அதிர்வாகும்…
விண்ணோடும்…மண்ணோடும்…(2)
ஒரு கையின் பிடியாகும் லட்டானது ..-உன்
திருக்கையில் பூமிபோல் தான் தோன்றுது !
கோரஸ்:
கோவிந்தனே ! கோவிந்தனே ! – எனும்
கோஷத்தைக் கேட்கின்ற கிரிவாசனே ! (2)
(கடன் வாங்கி கல்யாணம் )