பாருங்கோ பெரியவா !

என்னைப் பாருங்கோ பெரியவா ! – அருட்
கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2)
சின்ன பார்வையும் போதுமே ! – பெரும்
புண்ணியன் ஆவேன் நானுமே ! (2)
(என்னைப்)
த்யானம் செய்து பழம் உருட்டி
தயை செய்யுங்கோ பெரியவா ! (2)
ஞானம், செல்வம், ஆரோக்யம் – அந்த
நொடியில் சேர்ந்திடும் அல்லவா !
(என்னைப்)
மட்டைத் தேங்காய் கரம் எடுத்து
ஆசி கொடுங்கோ பெரியவா ! (2)
மங்கலம் யாவும் வாசல்வந்து
வந்தனம் சொல்லும் அல்லவா !
(என்னைப்)