psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

பஞ்சமியின் நாயகியே வாராகி !

🕉️


varahi

Youtube link <—

“வாராய்!” என்றாலே வருபவளாம் வாராகி !
“தாராய் !” எனக் கேளாமல் தருபவளாம் தாயாகி ! (2)

பஞ்சமி நாளிலே…பூஜைகள் செய்வதால்…
நெஞ்சம் குளிர்ந்திடுவாள் ! வாராகி ! (2)

கோரஸ்:
பஞ்சமியின் நாயகியே சரணமம்மா ! – மன‌
சஞ்சலங்கள் தீர்த்திடவே வரணுமம்மா ! (2)

சரணம் – 1
——————

இலுப்பெண்ணெய் ஊற்றியே
விளக்கினை ஏற்றினால்..
களிப்புடன் ஏற்றுநம் எதிர்ப்புகள் நீக்குவாள் ! (2)
காரியம் யாவிலும் உடன்வருவாள்
சீரிய வரம் தருவாள் ! சௌக்கியம் சேர்த்திடுவாள் ! (2)

கோரஸ்:
பஞ்சமியின் நாயகியே சரணமம்மா ! – மன‌
சஞ்சலங்கள் தீர்த்திடவே வரணுமம்மா ! (2)

சரணம் – 2
——————-

தேய்பிறை பஞ்சமி…
தேவியின் திருவடி…
சிந்தையில் தாங்கினால் விந்தைகள் மேவுமே! (2)
அம்பிகை சேனையின்…அதிபதி ஆனவள்…!
நம்பிய பேருக்கெல்லாம் நவநிதி தருபவள் ! (2)

கோரஸ்:
பஞ்சமியின் நாயகியே சரணமம்மா ! – மன‌
சஞ்சலங்கள் தீர்த்திடவே வரணுமம்மா ! (2)