பாதாள செம்பு முருகன்

பாதாளம் தனிலுறையும் செம்பு முருகன்!
பார்த்தாலே புதிதான தெம்பு தருவன் !
செம்பாலே சிலையாகி திண்டுக்கல் நகரில்..
நம்பியோர்க் கருள்செய்ய அவனுக்கு நிகரில்…
கோரஸ்:
பாதாள செம்பு முருகன் ! -அவன்
பதமலர்கள் என்றும் சரண்!(2)
சரணம் 1
மலைமீது படியேறும் கோயில் பல கொண்டான் !
அங்கெல்லாம் நமக்காக மனமிரங்கி வருவான் !
பாதாளக் கோயிலிதில் நாமிறங்கி சென்றால்..
வாழ்வினிலே பலபடிகள் நமையேற்றி விடுவான்
கோரஸ்:
பாதாள செம்பு முருகன் ! -அவன்
பதமலர்கள் என்றும் சரண்!(2)
சரணம் 2
கருங்காலி மாலையினை அவனடியில் வைத்து
கருத்தோடு நாம் அணிய பலனாகும் சிறப்பு
வருங்காலம் வளமாக்கி துணையாகி வருவான்
தரும் காலம் அது பார்த்துத் தானாகத் தருவான்
கோரஸ்:
பாதாள செம்பு முருகன் ! -அவன்
பதமலர்கள் என்றும் சரண்!(2)
பாதாளம் தனிலுறையும் செம்பு முருகன்!
பார்த்தாலே புதிதான தெம்பு தருவன் !
செம்பாலே சிலையாகி திண்டுக்கல் நகரில்..
நம்பியோர்க் கருள்செய்ய
அவனுக்கு நிகரில்…
கோரஸ்:
பாதாள செம்பு முருகன் ! -அவன்
பதமலர்கள் என்றும் சரண்!(2)