கொலுவிருக்க வாருமம்மா !

அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து
அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2)
அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள்
அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2)
(அழகான கொலு)
இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி கரம்…
இல்லையென்று சொல்லாமல் அ ள்ளித்தரும் பல வரம் (2)
அல்லல்களைத் தீர்த்திடும் அஷ்டலட்சுமி அவதாரம் (2)
இஷ்டமுட ன் உனைவேண்ட கூடும் நலன் ஏராளம் (2)
(அழகான கொலு )
குங்குமமும் மங்கலமும் தரும் மங்கலச்செல்வியே !
கலைமகள் வடிவாகி தந்திடுவாய் கல்வியே !(2)
சிங்கத்திலே ஏறிடும் ஸ்ரீதுர்க்கை அன்னையே ! (2)
தஞ்சமது நீயெனவே நாடி வந்தோம் உன்னையே (2)
(அழகான கொலு)