நவராத்திரி நான்காம் நாள் – தைர்யலட்சுமி பாடல்

தைரிய லட்சுமி
————————-
ஓம் த்ருதி ரூபாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹே !
தன்னோ வீர லட்சுமி ப்ரசோதயாத் !
****************************
பல்லவி
பவபய ஹாரிணி !
மதுசூதன் மோகினி !
நவமணி சூடிடும்!
ஸ்ரீ பவ தாரிணி ! (2)
உன் துணை கொண்டதால்
பயம் ஏதும் இல்லை !
தைரிய லட்சுமியே !
போற்றியே ! போற்றி ! (2)
அச்சம் கூட அச்சம் கொள்ளும் !
அன்னை உந்தன் நாமம் சொன்னால்…
மனதுள் தானாய் சுரந்திடும் வீரம் !
தைரிய லட்சுமியே ! நீ சரணம்!
சரணம் – 1
பாரதப் போரில்
பார்த்தனின் வீரம்…
பார்த்தது பூமி
உன்னாலன்றோ ! (2)
எண்கை ஏந்தி…
எதிரியை சாடி…
வெற்றியை நாட்டும்
உன் தீரமே ! (2)
அச்சம் கூட அச்சம் கொள்ளும் !
அன்னை உந்தன் நாமம் சொன்னால்…
மனதுள் தானாய் சுரந்திடும் வீரம் !
தைரிய லட்சுமியே ! நீ சரணம்!
(பவபய ஹாரிணி)
சரணம் – 2
தெள்ளிய ஓடை
போலொரு சிந்தை…
தந்திடும் தாயே !
நீதானம்மா! (2)
கருணை வடிவும்
வீரமும் சேர்ந்த
அருமை தெய்வம்
நீதானம்மா ! (2)
அச்சம் கூட அச்சம் கொள்ளும் !
அன்னை உந்தன் நாமம் சொன்னால்…
மனதுள் தானாய் சுரந்திடும் வீரம் !
தைரிய லட்சுமியே ! நீ சரணம்!
(பவபய ஹாரிணி)