நடராஜ தசகம் (Tamil)
1)
கனகசபா உறை, காந்த பொன் தேகனே !
காமனை வென்றவா ! சாம்பசிவா !
கலித்துயர் பாவங்கள் தீர்த்தருள் செய்பவா !
கரித்தோல் பூண்ட பரமசிவா !
நீலோத் பலமலர் நிறத்தினில் ரத்தினம்
பொதிந்ததோர் மகுடம் சூடியவா !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
2)
கரத்தினில் சூலமும் ஏந்திடும் சூலா !
காலனை வென்றவா ! சாம்பசிவா !
பதமலர் போற்றிடும் அடியவர்க்கு (யா)வையும்
பரிவுடன் தருகிற பரமசிவா !
சிவனடியார்கள் வணங்கிடும் ஈசா !
சாம்பலைப் பூசிடும் சர்வேசா !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
3)
ஹரஹர சங்கர உரைப்பவர் மனதினில்
உறைந்தருள் செய்திடும் சிதம்பரனே !
பிறருக்கு என்றும் தொல்லைகள் செய்யும்
தீயவர் பயம்கொள்ளும் ஹரசிவனே !
ஆயிரம் தலையினன் இதயத்தில் வாழ்ந்திடும்
அர்ஜுனன் குருவே குருசிவனே !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
4)
மங்கலம் தந்திடும் அம்பிகை உடனுறை
சங்கரன் சிவனே ! எழில் உருவே !
இந்திரன் தொழுதிடும் மந்திர வடிவே !
ரகசிய ரூபனே ! தவ குருவே !
முரஹரன் மாலவன் அருள்தரும் சன்னதி
அருகினில் அருளிடும் ஹரசிவனே !
திரிபுரம் எரித்தவா ! பாவங்கள் எரித்தெமை
எதிரிகள் விலக்கி காத்திடவா !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
5)
நீறினைப் பூசிடும் நாகா பரணனே !
நந்தி வாகனா ! உமை பதியே !
பேரெழில் நாட்டியம் ஆடிடும் பாதா !
உலகையே உடலாய் கொண்ட சிவா !
புத்திர பாக்யமும், சகல சௌக்யமும்
தந்திடும் தயாளா ! குண சீலா !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
6)
இளம்பிறை சூடிய இறைவனே ! தேவா !
அனைத்துயிர் உறையும் ஜக தீசா !
நலம்தரும் மந்திரத் திரு வடிவான
பூத கணம்சூழ் பர மேசா !
ப்ரம்மனும், விஷ்ணுவும் நார தாதியரும்
போற்றிடும் திருவே சிவ நேசா !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
7)
மலைமகள் நல்கிய சந்தனம், சம்பகம்
குங்குமம் மணம்நிறை மேனி யனே !
திமி திமி திந்திமி எனுமொலி எழுப்பிடும்
பதம்தனில் நடனம் தந்த வனே !
தேவர்கள் மனம்மகிழ் ஆனந்த தாண்டவம்
ஆடிய பதனே ! குரு சிவனே !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
8)
இமவான் புத்திரி பார்வதி பதியே !
நற்குணக் கடலே! அருள்நிதியே!
ஐங்கரன், அறுமுகன் போற்றிடும் சிவனே!
அழகிய பொன்நிற மேனியனே!
சூரியன் கண்எனக் கொண்ட எம்அரனே!
கோகுலக் கண்ணனின் சிநேகிதனே!
குவளயம் போற்றிடும் குரு சிவ பரனே !
கோபுர தரிசனம் தருபவனே !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
9)
சிரத்தினில் சந்திரன் கரத்தினில் டமருகம்
அக்னியும் தாங்கிடும் பரமசிவா !
இந்திர பதம்தரும் சங்கர சிவனே!
அன்பர்கள் பிணிகளைத் தீர்ப்பவனே !
கையினில் மானும் காலடி அதனில்
ரோக தேவதை கொண்டவனை..
மெய்யென துதிசெய் அனுதினம் மனமே!
பார்வதி நாதன் ஹரசிவனே !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
10)
பணிந்திடும் அடியவர்க் கருள்தரும் ஈசா !
பதஞ்சலி போற்றிய பரமசிவா!
வெம்புலி பாதரும் வணங்கிய தேவா!
நீல கண்டனே ! வேத சிவா !
டமருக ஒலிதரும் கலைகளின் நாதா !
ரகஸ்ய ரூபனே ! ஜடா தரா !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !
11)
ராம தீட்சிதர் அருளிய பாடலை
பக்தியாய் அனுதினம் படிப்பதனால்..
சேமங்
கள் யாவையும் சேர்ந்திடும் வாழ்வில்
விரும்பிடும் யாவும் கைகூடும் !
சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்
ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !