நம:சிவாய – மந்திரத்தின் மகிமை

நம:சிவாய என்னும் ஒரு அரிய மந்திரம்…
பயம் களைந்து தெளிவுதன்னை தெரியச் செய்திடும்…
ஓம் நம:சிவாய என்று முப்பொழுதிலும்…
செப்பிடுவாய் என்மனமே எப்பொழுதிலும்…
(நம:சிவாய என்னும்)
உச்சரிக்கும் உத்தமரைத் தேவர் எனஆக்கிடும் !
அச்சம் தரும் காலனுக்கே அச்சத்தினைத் தந்திடும் !
பாவியரும் சொல்லிவந்தால் புண்ணியங்கள் சேர்த்திடும் !
தேடித் தரும் எல்லையிலா வீடு, பேறு செல்வமும் !
(நம:சிவாய என்னும்)
நான்மறைகள், வேதங்களின் மூலம் என்று ஆனது !
ஞானம் தரும் தியானத்திற்கு மந்திரமாய் ஆனது !
தீவினைகள் தீய்த்துவிடும் வல்லமைகள் கொண்டது !
ஐந்தெழுத்தில் அதிசயங்கள் ஆக்கும் திறன் கொண்டது !
(நம:சிவாய என்னும்)