psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

அன்பைப் பொழியும் யசோதா

🕉️ ஸ்ரீ கிருஷ்ணர்
Translations

🎵 Watch/Listen on YouTube


அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் !
அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே !

கோபியர்கள் கைகள் தன்னில் ஒளிருகின்ற மாணிக்கமே !
கோபக்காரன் கம்சனுக்கு..வஜ்ரமான வைரமே….!
மூன்றுலோகம் முழுதுமாக…மின்னுகின்ற மரகதமே !
ஒன்றாய் எம்முள் ஆனாயே…சின்ன கிருஷ்ணனே…!

(அன்பை பொழியும்)

காதல் செய்யும் ருக்மணிக்கு, இதழோடு பவளம் நீயே !
கோவர்தன மலை தாங்கும்..கோமேதகமே…!
சங்கு, சக்கரம் இடை நின்றாடும் வைடூர்யமே !
எங்களுக்கு கதியே நீதான்..மலர்க்கண்ணனே…!
(அன்பை பொழியும்)

காளிங்கன் தலைமீதாடும் எழில் புஷ்பராகம் நீயே !
ஏழுமலையை ஆளுகின்ற இந்த்ர நீலம் நீயே !
பாற்கடலில் தோன்றி வந்த..பொக்கிஷமே ! ரத்தினமே !
பாலனாக ஓடுகின்ற…பத்மநாபனே…!

(அன்பை பொழியும்)