psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

மருகேலரா ! – தமிழில்

🕉️ ஸ்ரீ ராமர்
Translations

🎵 Watch/Listen on YouTube


ராகம்: ஜெயந்தஸ்ரீ
தாளம்: ஆதி
தெலுங்கு கீர்த்தனை: ஸ்ரீ த்யாகராஜா ஸ்வாமிகள்

பல்லவி
———-
மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ! (2)
மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ! (2)
மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ….

அனுபல்லவி
—————
அசையும் உயிரும், அசையா பொருளும் உந்தன் ரூபம் !

அசையும் உயிரும், அசையா பொருளும் உந்தன் ரூபம் !
சந்திர, சூர்யர் உந்தன் கண்கள் என்றே ஆகும் !
மறைந்தே நிற்பதேன் ?…..
சந்திர, சூர்யர் உந்தன் கண்கள் என்றே ஆகும் !
மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ….

சரணம்
———–
அங்கும் இங்கும் தேடிஎன் உள் மனதால் கண்டேன்..(2)
அனைத்தும் நீயே என்றுதெளிவு தன்னைக் கொண்டேன்
அங்கும் இங்கும் தேடிஎன் உள் மனதால் கண்டேன்..
அனைத்தும் நீயே என்றுதெளிவு தன்னைக் கொண்டேன்

உன்னை அன்றி நெஞ்சில்
வேறு யாரும் இல்லை !

உன்னை அன்றி நெஞ்சில்
வேறு யாரும் இல்லை !

த்யாகராஜன் என்னை..
காக்க வேண்டும் ராமா…

மறைந்தே நிற்பதேன் ?…..

த்யாகராஜன் என்னை..
காக்க வேண்டும் ராமா…

மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா …. (2)