psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

மந்த்ராலய குருவின் மகிமை

🕉️ குரு குரு ராகவேந்திரர்
Originals

🎵 Watch/Listen on YouTube


ragavendra

மந்திராலய குருவின்
மகிமையினைப் பாடி
மகிழ்ந்திடுவாய்  மனமே !
மகிழ்ந்திடுவாய் ! (2)
விந்தைஎன அவர்புரிந்த அற்புதங்கள் கோடி ! (2) – அதில்
ஒன்றிரண்டு பாடினாலும் இன்பம் வரும் கூடி… (2)

(மந்திராலய குருவின்)
கோரஸ்:
ராகவேந்திர ஸ்வாமி !
பாத மலர் போற்றி ! (2)

சரணம் – 1
————

நஞ்சை புஞ்சை செழித்திருக்கும்
தஞ்சை நகரில் அன்று
பஞ்சம் வர மன்னவனும்
மனமுடைந்து போனான் (2)

தஞ்சம் என்று குருவிடம்போய்
அபயக்கரம் கேட்டான் ! (2)
யாகம் செய்து மேகம் சேர்த்து
மழைகொணர்ந்து தந்தார் ! (2)
மந்திராலய குருவின்
மகிமையினைப் பாடி
மகிழ்ந்திடுவாய்  மனமே !
மகிழ்ந்திடுவாய் !

கோரஸ்:
ராகவேந்திர ஸ்வாமி !
பாத மலர் போற்றி ! (2)

சரணம் – 2
——————

இலையினிலே இறைச்சியினை
மூடி வைத்து ஒருவன்
ஸ்ரீகுருவின் சக்தியினை
சோதனைகள் செய்தான் (2)
இறைச்சியினை இறைவனவர்
இனிய கனியாய் மாற்ற…(2)
பிழை உணர்ந்து அடிபணிந்து
குருவருளினைக் கொண்டான்…

மந்திராலய குருவின்
மகிமையினைப் பாடி
மகிழ்ந்திடுவாய்  மனமே !
மகிழ்ந்திடுவாய் !
விந்தைஎன அவர்புரிந்த அற்புதங்கள் கோடி ! – அதில்
ஒன்றிரண்டு பாடினாலும் இன்பம் வரும் கூடி..
மந்திராலய குருவின்
மகிமையினைப் பாடி
மகிழ்ந்திடுவாய்  மனமே !
மகிழ்ந்திடுவாய் !

கோரஸ்:
ராகவேந்திர ஸ்வாமி !
பாத மலர் போற்றி ! (4)