ஸ்ரீ மகா கணபதி 108 போற்றி

1)
மகா சதுர்த்தியின் நாயகனே ! Chorus: மகா கணபதி போற்றி !
மங்கலம் அருளும் நாதனே ! Chorus: மகா கணபதி போற்றி !
மகாதேவனின் மூத்த மைந்தனே! Chorus: மகா கணபதி போற்றி !
மகா விஷ்ணுவும் பணியும் தேவனே ! Chorus: மகா கணபதி போற்றி !
சதாசிவத்தின் மொத்த உருவமே ! Chorus: மகா கணபதி போற்றி !
சர்வ லோகத்தின் முதன்மை தெய்வமே ! Chorus: மகா கணபதி போற்றி !
“முதா கராத்த” துதியைக் கேட்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
மூஷிகமேறி வந்து அருள்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
2)
இளம்பிறை சூடும் பாலசந்திரா ! Chorus: மகா கணபதி போற்றி !
இளமைத்தோற்றமாய் பொலியும் சுந்தரா ! Chorus: மகா கணபதி போற்றி !
வலம்புரியாக துதிக்கை நின்றவா! Chorus: மகா கணபதி போற்றி !
வலம்வருவோர்க்கு அருட்கை காட்டுவாய்! Chorus: மகா கணபதி போற்றி !
நலன்கள் யாவையும் தந்து அருள்பவா! Chorus: மகா கணபதி போற்றி !
நற்குணகுன்றாய் திகழும் ஆண்டவா! Chorus: மகா கணபதி போற்றி !
குலம் காத்திட முந்திவருபவா !Chorus: மகா கணபதி போற்றி !
குமரக் கடவுளை முந்தி வந்தவா !Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
3)
எளிய தோற்றமாய் கோலம் கொண்டவா ! Chorus: மகா கணபதி போற்றி !
எளிதில் வரங்களை அருளும் ஆண்டவா ! Chorus: மகா கணபதி போற்றி !
எலியின் மீதிலே உலவி வருபவா !Chorus: மகா கணபதி போற்றி !
எதிலும் நீங்காமல் நிறைந்து நிற்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
வலிமை மிகுவான யானை உடலினாய் ! Chorus: மகா கணபதி போற்றி !!
வெளியில் தெரிகின்ற பானை வயிற்றினாய் ! Chorus: மகா கணபதி போற்றி !!
கலியில் பக்தர்க்கு வரதன் ஆனவா ! Chorus: மகா கணபதி போற்றி !
களிப்புகள் தரும் களிறும் ஆனவா ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
4)
ஆல மரத்தடியே ஆலயமானாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
அழகு மலைக்கோட்டை அங்கும் அருளுவாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
ஞாலம் என்பதே பெற்றோர் என்றாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
ஞானப் பழம் பெற்று தத்துவம் சொன்னாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
பாலனாய் கோலம் பால கணபதியே ! Chorus: மகா கணபதி போற்றி !
பாரிதன் முதலே மூல கணபதியே ! Chorus: மகா கணபதி போற்றி !
வேலவன் அண்ணன் வேழ முகத்தவா ! Chorus: மகா கணபதி போற்றி !
வேண்டும் வரமருளும் ஐந்து கரத்தவா ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
5)
உடையும் சிதறுகாய் ஒலியை ரசிப்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
உமா தேவியின் மடியில் மகிழ்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
தடைகள் யாவையும் விலக்கி வைப்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
தேவர் குலம்தன்னை காத்து நிற்பவா ! Chorus: மகா கணபதி போற்றி ! இடையில் நாகத்தை அணிகலன் ஆக்கினாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
இளகும் மனமாவாய் பணிந்து வேண்டினால் ! Chorus: மகா கணபதி போற்றி !
கடைப் பார்வையால் கண்டு அருள்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
கருணை வெள்ளமாய் உள்ளம் கொண்டவா ! Chorus: மகா கணபதி போற்றி !!
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
6)
கணபதி தாளம் கேட்டு ஆடுவாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
கணத்தினில் அருளும் கணங்கள் நாதனே ! Chorus: மகா கணபதி போற்றி !
மனதின் விருப்பங்கள் உணர்ந்து தருபவா ! Chorus: மகா கணபதி போற்றி !
மலரும் திருப்பங்கள் வாழ்வில் காட்டுவாய் ! ! Chorus: மகா கணபதி போற்றி !
குணத்தின் மூவகை வடிவும் ஆனவா ! Chorus: மகா கணபதி போற்றி !
குழந்தையும் மகிழும் ரூபம் ஆனவா ! Chorus: மகா கணபதி போற்றி !
தனமும் செல்வமும் அருளும் ஆண்டவா ! Chorus: மகா கணபதி போற்றி !
தினமும் உன்பதம் வணங்கி பாடுவோம் ! ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
7)
மஞ்சள் பிடித்தாலும் மங்கலம் ஆவாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
மனதில் உருவேற்றும் மந்திரம் ஆவாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
முஞ்சைப் புல்லையே ஆடை ஆக்கினாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
முந்தை வினைகளின் பீடை நீக்குவாய் ! ! Chorus: மகா கணபதி போற்றி !
தஞ்சம் என்பார்க்கு தயைகள் புரிபவா ! Chorus: மகா கணபதி போற்றி !
தஞ்ச மடைந்தாரின் தேவை அறிந்தவா ! Chorus: மகா கணபதி போற்றி !
விஞ்சும் அருளினால் நெஞ்சம் வென்றவா ! Chorus: மகா கணபதி போற்றி !
வேள்வி ஏற்றிடும் வேழத் திருமுகா ! ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
8)
ஐந்து கரத்தானே ! ஆனை முகத்தானே ! ! Chorus: மகா கணபதி போற்றி !
ஐயன் ஐயப்ப ஸ்வாமி மூத்தானே ! ! Chorus: மகா கணபதி போற்றி !
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றானே ! ! Chorus: மகா கணபதி போற்றி !
இந்திரன்,தொழும் தேவ தேவனே ! ! Chorus: மகா கணபதி போற்றி ! !
நந்தி மைந்தனே ! ஞானக் கொழுந்தனே ! ! Chorus: மகா கணபதி போற்றி !
நலங்கள் யாவையும் முந்தித் தருவனே ! ! Chorus: மகா கணபதி போற்றி !
புந்தியில் வைத்துனை வந்தனம் செய்வோம் ! ! Chorus: மகா கணபதி போற்றி !
புண்ய மூர்த்திஉன் பதங்கள் பணிகுவோம் ! ! ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
9)
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் ! Chorus: மகா கணபதி போற்றி !
திருநெல் வேலியின் உச்சிஷ்ட கணபதி ! Chorus: மகா கணபதி போற்றி !
திரு நாரையூர் பொள்ளா பிள்ளையார் ! Chorus: மகா கணபதி போற்றி !
திருக் குடந்தையின் கரும்பாயிரத்தான் ! ! Chorus: மகா கணபதி போற்றி !
மாம்பழ நகரிலே ராஜ கணபதி ! Chorus: மகா கணபதி போற்றி !
மாநகர் காஞ்சியில் சங்குபாணியே ! Chorus: மகா கணபதி போற்றி !
பிள்ளையார்பட்டி கற்பக கணபதி ! Chorus: மகா கணபதி போற்றி !
புதுச் சேரியில் மணக்குள கணபதி ! Chorus: மகா கணபதி போற்றி ! !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
10)
பாலில் அபிஷேகம் களிக்கும் பாலனே ! Chorus: மகா கணபதி போற்றி !
பன்னீர் மணத்தோடு குளிக்கும் சுமுகனே ! Chorus: மகா கணபதி போற்றி !
நூலாய் அரவத்தை பூணும் நாதனே ! Chorus: மகா கணபதி போற்றி !
நெற்றித் திலகத்தில் ஜொலிக்கும் தீரனே ! ! Chorus: மகா கணபதி போற்றி !
எருக்க மாலையை ஏற்கும் எளியனே ! Chorus: மகா கணபதி போற்றி !
அருகம் புல்லினை விரும்பும் அன்பனே ! Chorus: மகா கணபதி போற்றி !
இனிக்கும் மோதகம் படைக்க மகிழுவாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
இனிமை யாவையும் சேர்த்து அருளுவாய் ! ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
11)
ஆவணி மாதம் அவதரித்தவா ! Chorus: மகா கணபதி போற்றி !
அல்லல் யாவையும் தீர்க்க வந்தவா ! Chorus: மகா கணபதி போற்றி !
காவலாகியே காக்க வந்தவா ! Chorus: மகா கணபதி போற்றி !
கந்தன் முன்னவா ! கரியின் முகத்தவா ! ! Chorus: மகா கணபதி போற்றி !
ஆவலாக வேண்ட மகிழ்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
அள்ளித் தருவதில் வள்ளலானவா ! Chorus: மகா கணபதி போற்றி !
நாவில் வல்லமை நல்கும் நாயகா ! Chorus: மகா கணபதி போற்றி !
நந்திதேவனும் பணியும் நாதனே ! ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
12)
அகவல் கேட்டாலே அகம் மகிழுவாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
அவ்வைப் பாட்டிக்கு கயிலை காட்டினாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
அகத்திய முனியின் சினத்தை அடக்கினாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
அசுரர் அகங்காரம் துண்டம் ஆக்கினாய் ! ! Chorus: மகா கணபதி போற்றி !
கஜமுகா சுரன் வதமுடித்தவா ! Chorus: மகா கணபதி போற்றி !
அனலாசுரனின் அனல் விழுங்கினாய் ! Chorus: மகா கணபதி போற்றி !
கஜ முகத்தானே ! கருணாகரனே ! போற்றி
கர்ம வினையாவும் தீர்த்துக் காப்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
13)
சக்தி தேவியின் அன்புச் செல்வனே ! Chorus: மகா கணபதி போற்றி !
சதுர்த்தி நாயகா ! சங்கட ஹரனே ! Chorus: மகா கணபதி போற்றி !
முக்தி அருளிடும் மூஷிக நாதா ! Chorus: மகா கணபதி போற்றி !
மூன்று காலமும் அறிந்து உணர்ந்தவா ! Chorus: மகா கணபதி போற்றி !
பக்தி மனங்களில் வாசம் செய்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
பாசம், அங்குசம் ஏந்தும் ஆண்டவா ! Chorus: மகா கணபதி போற்றி !
அத்தி முகத்தவா ! அச்சம் தீர்ப்பவா ! Chorus: மகா கணபதி போற்றி !
அகந்தை அழிப்பவா ! ஆதி மூலமே ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)
14)
ஒற்றை தந்தனே ! ஓம் காரனே ! Chorus: மகா கணபதி போற்றி !
ஒன்பது கோளும் பணியும் தேவனே ! Chorus: மகா கணபதி போற்றி !
வெற்றி தந்திடும் வேத ரூபனே ! Chorus: மகா கணபதி போற்றி !
வெண்மை சூடிடும் வேழன் பாதமே ! Chorus: மகா கணபதி போற்றி !
கோரஸ்:
சதுர்த்தி நாயகா போற்றி !
ஸ்ரீவி நாயகா போற்றி ! (2)