திருமீயச்சூர் லலிதாம்பிகை

லட்சணமாய் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் !
லலிதாம்பாள் அருள்புரியும் திருமீயச்சூர் ! (2)
தமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் ! (2)
நவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் !
கோரஸ்:
மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் !
அனுதினமும் செய்திடுவோம் பாராயணம் ! (2)
கர்வம் கொண்ட சூரியனின் கருமை வண்ணம்…
கலைய தவம் செய்துபுது ஒளி பெற்ற ஊர் ! (2)
அருவனாம் அருணணுக்கு அரசிவனுமே…(2)
அகமுவந்து அருள்கொடுத்த அற்புதமாம் ஊர் !
கோரஸ்:
மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் !
அனுதினமும் செய்திடுவோம் பாராயணம் ! (2)
சரணம் – 2
—————-
சங்கு மலர் கொண்டு வந்து அர்ச்சனைகளும்..
பிரண்டையிலே சாதமென நைவேத்யமும்(2)
செய்து எம தர்மனுமே அடி பணிந்த ஊர் (2)
நம்பிவரும் அன்பருக்கு நலமருளும் ஊர் !
கோரஸ்:
மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் !
அனுதினமும் செய்திடுவோம் பாராயணம் ! (2)
லட்சணமாய் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் !
லலிதாம்பாள் வாழ்கின்ற திருமீயச்சூர் !
தமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் !
நவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் !
கோரஸ்:
மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் !
அனுதினமும் செய்திடுவோம் பாராயணம் ! (2)