psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் – பாராயண மகிமை

🕉️ அம்பாள் / தேவி
Originals

🎵 Watch/Listen on YouTube


அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் ! – அதை
நம்பிக்கையாய் சொல்லுவார்க்கு கோடி புண்ணியம் ! (2)

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் (2) – தினம்
செய்திடவே சேர்ந்திடுமே வாழ்வில் மங்கலம்…!

அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் ! – அதை
நம்பிக்கையாய் சொல்லுவார்க்கு கோடி புண்ணியம் ! 

கோடி புண்ணியம் !   கோடி புண்ணியம் ! 

சரணம் 1
————–
நாரணனின் திருவுருவாம் ஹயக்ரீவரே
மாமுனியாம் அகத்தியர்க்கு அருளிச் செய்தது ! (2)

பூரணமாய் பிணிகள் நீக்கி ஆயுள் கூட்டுமே…(2)- நல்ல
பேறு தந்து பெருவாழ்வு தன்னைக் காட்டுமே…

அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் !

ஓராயிரம் !
 

சரணம் 2
———

கங்கை ஸ்நானம், அன்னதானம்..அவற்றைக் காட்டிலும்
மங்கலங்கள் மிகுதியாக சேர்க்க வல்லது ! (2)

பாவங்களை போக்கும்எளிய முறையுமானது (2) – தேவி

நாமங்களே வேத மென்னும் மறைகளானது 
 
சரணம் 3
———
 அம்பிகையின்  கருணை போல அருளும் இல்லையே !
அவளின் நாமம் போலருமைப் பொருளும் இல்லையே ! (2)
 
‘ஜகன்மாதா’ என்றுலகின் தாயுமாகியே…(2) – இந்த
ஜகமெல்லாம் காத்தருளும் லலிதாம்பிகே !
 

அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் ! – அதை
நம்பிக்கையாய் சொல்லுவார்க்கு கோடி புண்ணியம் ! 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் (2) – தினம்
செய்திடவே சேர்ந்திடுமே வாழ்வில் மங்கலம்…!

 
அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் !
ஓராயிரம் !