லட்சுமி ! வருவாய் !

லட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !…
வரலட்சுமி !வருவாய் எம் அகத்திற்கு !
திருப் பாற்கடல் புதல்வி…
வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !
லட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !
சூரியன் போலே ஒளியுடன் நீயே ! (2)
சூட்சுமமாக மோட்சம் அருளும்
ப்ருந்தாவனத்தில் உறையும் தாயே ! (2)
திருப் பாற்கடல் புதல்வி…
வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !
மஞ்சள், குங்குமம், கஸ்தூரியும்
மணக்கும் ஜாதிப் பூவும் சார்த்தி (2)
கோரோஜனமும் படைத்தோம் அம்மா !
கோரிக்கை ஏற்பாய் மலர்விழியாள்நீ ! (2)
லட்சுமி !வருவாய் எம் அகத்திற்கு !
திருப் பாற்கடல் புதல்வி…
வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !
நறுமண சந்தனம், சாம்பிராணி..
நெய்யில் தூபம், ஆரத்தி தீபம்..(2)
அம்மா உந்தன் மனம்குளிர் வகையாய்
அன்புடன் சமர்ப்பணம் செய்தோம் ஏற்பாய் ! (2)
லட்சுமி !வருவாய் எம் அகத்திற்கு !
திருப் பாற்கடல் புதல்வி…
வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !
வாசனை திரவியம், ஐவகை வில்வம்
பூரண கும்பம், அக்ஷதையுடனே.. (2)
ஆசையாய் படைத்தோம்..உன்மனம் கவர
அன்பாய் ஏற்றருள் செய்திட வேணும்.. ! (2)
திருப் பாற்கடல் புதல்வி…
வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !
குண்டு மல்லிகை, செண்பகப்பூவும்
செண்டாய் வாச சாமந்திப்பூவும்
கண்டெடுத்த பாரிஜாதமும்…
அன்பாய் ஏற்றருள் செய்திட வேணும்.. ! (2)
திருப் பாற்கடல் புதல்வி…
வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !
ஜரிகை மின்னிடும் பட்டுச் சேலை..
ஜொலிக்கும் பச்சை நிற மேலாடை.. (2)
தாழம்பூவால் பிண்ணிய வார்சடை
அலங்கா ரத்தில் செய்தோம் பூஜை ! (2)
இனிக்கும் மாதுளை, வாழைப்பழமும்
இலந்தம் பழமும், பேரிச்சைபழமும்
கனிவகை பலவாய் நெய்யுடன் சேர்த்து…
கனிவாய் படைத்தோம்..கமல மலர் உறை…
திருப் பாற்கடல் புதல்வி…
வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !