லட்சுமி குபேர பூஜை-தீபாவளி பாடல்

வீடெல்லாம் லட்சுமிகரம் !
அருள் செய்யும் லட்சுமி கரம்…!
லட்சுமி குபேர பூஜை செய்வதினாலே…
வாழ்வினிலே சேர்ந்திடுமே கோடி நலம் ! (2)
கோரஸ்:
லட்சுமி குபேரா போற்றி ! போற்றி !
லட்சிய சீலா…போற்றி ! போற்றி ! (2)
சரணம் -1
—————-
தீபாவளி நாள் அதனில் மாலை வேளையில்…
தீபமேற்றி, கலசம் வைத்து கணபதி பூஜை.. (2)
மகாலட்சுமி புகழைப்பாடி குபேர பூஜை…(2)
குபேரனைப் போற்றி சொல்லி மந்திரம் ஓதி…(2)
தூபம், தீபம், நைவேத்யம், கற்பூர ஜோதி…(2)
கோரஸ்:
லட்சுமி குபேரா போற்றி ! போற்றி !
லட்சிய சீலா…போற்றி ! போற்றி ! (2)
சரணம் -2
—————
ஸ்ரீ லட்சுமி..செல்வங்களின் ஒரே அதிபதி , அதைப்
பிரித்தளிக்கும் குபேரனோ தர்ம ப்ரதிநிதி ! (2)
சிவனருளும் மால் அருளும் பெற்ற குணநிதி ! (2)
வடதிசையின் நாயகனாய் அருளும் தயைநிதி ! (2)
வணங்கிடவேத் தந்திடுவான் வேண்டும் நவநிதி ! (2)
கோரஸ்:
லட்சுமி குபேரா போற்றி ! போற்றி !
லட்சிய சீலா…போற்றி ! போற்றி ! (2)
(வீடெல்லாம் )
Background Image Credits:
<a href=’https://www.freepik.com/vectors/background’>Background vector created by starline – www.freepik.com</a>