ஸ்ரீ லட்சுமி குபேர ஆர்த்தி – தமிழில்

தமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத்
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! – ஸ்வாமி
யக்ஷ குபேரனே ! ஜெய் !
சரணென வந்திடு வோர்க்கு – தன்னை
சரணென வந்திடு வோர்க்கு
செல்வம் தருவோனே ! –
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2)
ஈசனின் பக்தரில் சிறந்தவன்
குபேரனே நீதானே! – ஸ்வாமி
குபேரனே நீதானே !
தானவர், அசுரருக் கெதிராய் – கொடும்
தானவர், அசுரருக் கெதிராய்
போர் பல செய்தவனே !
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2)
தங்க சிம்மாசனம் அமர்ந்தாய் !
தலைமேல் குடை அசைய..- உன்
தலைமேல் குடை அசைய…
யோகினியர் இசைப்பார் கானம் ! – இளம்
யோகினியர் இசைப்பார் கானம் ! – உடன்
ஜெய ஜெய எனும்கோஷம் !
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2)
சூலமும், கதையுடன் ஆயுதம்
கரங்களில் பல ஏந்தி – உந்தன்
கரங்களில் பல ஏந்தி…
சோகம், பயம் தடை தீர்ப்பாய் ! – எம்
சோகம், பயம் தடை தீர்ப்பாய் !
ஏந்திடும் வில்லாலே…!
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2)
அன்புடன் படைக்கிறோம் உனக்கென
வித வித நைவேத்யம் ! – ஸ்வாமி
வித வித நைவேத்யம் !
உளுந்து சென்னா பண்டம் – நல்
உளுந்து சென்னா பண்டம்
இனிப்புகள் பலகாரம் !
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2)
பலமுடன், ஞானமும் அருள்வாய் !
உன் தாள் சரண்புகுந்தோம் ! – ஸ்வாமி
உன் தாள் சரண்புகுந்தோம் !
நலமுடன் வெற்றிகள் தருவாய் – என்றும்
நலமுடன் வெற்றிகள் தருவாய்..
உன்னடி பணிவோர்க்கு…!
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2)
நெய்திரி தீபத்தில் ஜொலித்திடும்
சிரத்தினில் மணி மகுடம் – ஆஹா
சிரத்தினில் மணி மகுடம் !
கழுத்தினில் ஆடிடும் மாலை – உன்
கழுத்தினில் ஆடிடும் மாலை
கவர்ந்திடும் முத்தாரம் !
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2)
யக்ஷ குபேரனுன் ஆரத்தி
பக்தியாய் துதிப்போர்க்கு – மெய்
பக்தியாய் துதிப்போர்க்கு …
விரும்பிடும் பலன்களைத் தருமே- மனம்
விரும்பிடும் பலன்களைத் தருமே !
சௌபாக்கிய முடனே…!
ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2)