psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

தீபத் திருநாள் கார்த்திகை

🕉️


Youtube Link

தீபத் திருநாள் கார்த்திகை ! –

நாம் பாடிடுவோம் அதன் சிறப்பினை ! (2)

ஆலயம் தோறும் ஏற்றுவோம் சொக்கப் பனை..

வேண்டிடுவோமே ஜோதியின் வடிவாய் சொக்கப்பனை ! (2)

கோரஸ்:

நம:சிவாய ! ஓம் நம:சிவாய !

நம:சிவாய ! ஓம் நம:சிவாய !  (2)

கடுந்தவம் இருந்து பார்வதி தேவி !

பரமனின் உடலில் ஆனாள் பாதி (2)

அடிமுடி அறியா ப்ரம்மனும் விஷ்ணுவும்

பரம்பொருளாகப் பார்த்தனர் ஜோதி ! (2)

பரம்பொருளாகப் பார்த்தனர் ஜோதி !

கோரஸ்:

நம:சிவாய ! நம:சிவாய !

நம:சிவாய ! நம:சிவாய !

நம:சிவாய ! நம:சிவாய ! (2)

அறுமுக கந்தனை கார்த்திகை பெண்கள்

அணைப்புடன் எடுத்த அற்புத திருநாள் ! (2)

தினம் தினம் தீபம் ஏற்றிய மாபலி

ரணம் குணம் ஆனதும் கார்த்திகை திருநாள் ! (2)

ரணம் குணம் அடைந்ததும் கார்த்திகை திருநாள் !