psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

எந்தப் புறம் சென்றாலும்

🕉️ காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர்
Originals

🎵 Watch/Listen on YouTube


ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்.. ————————————————————————–

எந்தப் புறம் சென்றாலும் சோதனையா?

எந்தப் புறம் போவதென தோணலையா?

காஞ்சிபுரம் போகலாம் வாருங்கள் ! – அந்த

மாமுனி தரிசனத்தைப் பாருங்கள் !

(எந்தப் புறம் சென்றாலும்)

சரணம் – 1

அவர் திருமுகம் பார்த்தால் ஆத்மானந்தம் !

அபயக் கரம் காட்ட பரமானந்தம் !

அருள் மொழி சொன்னாலோ பேரானந்தம் ! -சிறு

புன்னகை பூத்தாலோ சச்சிதானந்தம்!

(எந்தப் புறம் சென்றாலும்)

சரணம் -2

கதியென வந்தவர்க்கு கருணாகரன் !

மதிமுகம் காட்டிவந்த திவாகரன் !

இடர்களை நீக்க வந்த க்ருபாகரன் ! – நம்

மனதினை மயக்குகின்ற மனோகரன் !

(எந்தப் புறம் சென்றாலும்)