psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

Indire arase baaro

🕉️ விஷ்ணு / திருமால்
Translations


 

பல்லவி
———
திங்கள் முகத்தனே ! வாராய் !
திருமகள் ராஜனே ! வாராய் ! (2)
மன்மதனின் தந்தை வா ! வா !
மந்தார மலை விந்தை வா ! வா ! (2)

சரணம் 1
———
மத்ச்யாவ தாரனே ! வா !வா! ! கூர்ம அவ தாரனே வா !வா! !
மண்ணைக் காத்துத் தந்தவனே ! உத்தமனே வா !வா! வா !!
நல்லவனே ! நர சிம்மா வாராய் !
வல்லவனே ! வாமனா வாராய் !
சத்தியத்தைக் காக்க வந்த
சச்சிதானந்தா ! நீ வாராய் !

சரணம் 2
————
ராவணனை வென்றாய் ! வா! வா !
மாமனையேக் கொன்றாய் ! வா ! வா !
தேவைகளைத் தந்தருளும்
தேவர் தேவா ! வா ! வா ! வா !
புண்ய புத்தனாக வா ! வா !
புரட்சி கல்கி யாக வா ! வா !
தீயோரை வதம்செய்ய வாசுதேவா ! வா ! வா ! வா !

சரணம் 3
————
கஜேந்திரனைக் காத்தவா ! வா ! வா !
கனிவாய் பேசும் அழகே ! வா ! வா !
வஜ்ரம் பாய்ந்த வைரம்போல பக்தர் வேலி வா ! வா ! வா !
தனஞ் ஜெயனுக்கு வெற்றி, சஞ்சயனுக்கு ஞான திருஷ்டி..
தந்தவனே ! இனிய..ஹயக்ரீவா ! வா ! வா ! வா !