வருவாய் ! வருவாய் ! அனுமந்தா !

ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் மராத்தி அபங்கம் – தமிழ் பஜனை வடிவில்
நாராயணன் என்ற பெயரிடப்பட்டவர், சமர்த்த ராமதாஸ், சந்த் ராமதாஸ், ராமதாஸ் ஸ்வாமி என்ற பெயர்களில் பிரபலமான மராட்டிய ராம பக்தர். வீர சிவாஜி காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. ஸ்ரீ ராமர் மீதும், ஸ்ரீ ஆஞ்சநேயர் மீதும் நிறைய பாடல்கள் புனைந்துள்ளார் . “ஏயீ ! ஏயீ ! அனுமந்தா !” என்னும் அவரது பாடலின் தமிழாக்கமே இந்த பஜனை பாடல்.
தமிழாக்கம் / இசை: ஸ்ரீதேவிபிரசாத்
பாடியவர்: பத்ரி நாராயணன்
வருவாய் ! வருவாய் ! அனுமந்தா !
தாயாம் அஞ்சனை தவமைந்தா !
என்னுயிர்த் தோழன் நீதானே !
உன்வரவை எதிர் பார்த்தேனே !
இன்னல் தீர்த்து எனைக்காக்க
உன்னை இன்றி யாருள்ளார் ?
தாமதம் செய்தால் நானிங்கே
கவலைக் கடலில் மூழ்கிடுவேன் !
மராட்டிய பாடல் வார்த்தைகள் – தமிழில்…
ஏயீ ! ஏயீ ! அனுமந்தா !
மாஜே அஞ்ஜனிசா ஸுத !
துஜீ பஹாதோ மீவாட !
ப்ராண சகயா மஜலா பேட !
துஜ வான்சோனி மஜலா !
கோண ஸங்கடீ ரக்ஷிஸா !
நகோ லாவூ தூ வுஸீர !
தாஸ பஹு சின் தாதூர !