ராம தூதன் மாருதி !

ராம தூதன் மாருதி !
நாமம் போற்றி நீதுதி!
பஞ்ச பூதங்களை வென்றவன் ஆஞ்சநேயன் !
விடாமலே ஸ்ரீராமனின் பெயரைச் சொல்லி பாடிடும்…(ராம தூதன்)
விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே!
சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே !(ஆகாயத்தை வென்றவன் !)
விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே!
சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே !
ஆழ்கடல் மீதிலே…
பாலமும் செய்தவன் !
ஆழ்கடல் மீதிலே…
பாலமும் செய்தவன் !
(நீரை வென்றவன் !)
ஸ்ரீராம ராம் ஜெயராம ராம் என்று சொன்னால் உள்ளம் தன்னால் துள்ளிக் கூத்தாடிடும்…
(ராம தூதன்)
வாலின் தீயில் இலங்கையை…எரியச் செய்தவன்..!
(தீயை வென்றவன் !)
வீசும் காற்றை எதிர்த்துமுன் கிழித்துச் செல்பவன் !
(காற்றை வென்றவன் !)
மலையினைத் தாங்கியே
மருந்தினைத் தந்தவன் !
மலையினைத் தாங்கியே
மருந்தினைத் தந்தவன் !
(நிலத்தை வென்றவன் !)
ஸ்ரீராம ராம் ஜெயராம ராம் என்று சொன்னால் உள்ளம் தன்னால் துள்ளிக் கூத்தாடிடும்…
(ராம தூதன்)