psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

எங்கள் சமயபுரத்தாளே !

🕉️ அம்மன் சமயபுரம் மாரியம்மன்
Originals

🎵 Watch/Listen on YouTube


இமவான் மகளே ! உமையாள் வடிவே!
சமயபுரத்தாளே ! (2)

எமதாய் ஆகி, எம் தாய் ஆகி…
காக்கும் கரத்தாளே !

கண்களைக் காக்கும் இமைகளைப் போல்நீ
கண்ணபுரத்தாளே !

சரணம் 1
———–

வயிற்றின் வலி தீர தாயே நான்
வயிற்றின் வடிவிலொரு சிறு தகடை..
சேர்க்கத் தான் வேண்டிக் கொண்டேனே !
வலியை நீ தீர்த்து வைத்தாயே (2)

தகடினை ஏற்று தயை செய்யும்..
தங்க மனம் உனக்கு தானன்றோ! (2)

வேண்டியதருளி வேதனை தீர்க்கும்
கருணைக் கடலென்றும் நீயன்றோ?

இமவான் மகளே ! உமையாள் வடிவே!
சமயபுரத்தாளே !

சரணம் 2
——
பக்தர் நலன் காக்க நோன்பிருக்கும்
சக்தி தேவிஉன் அக்கரையில்…
உள்ளம் நெகிழ்ந்தே தான் நன்றியுடன்
பூக்கள் சொரிவோமே சித்திரையில் (2)

மாரியம்மனாய் தெய்வம் பல…
மகா ராணி அதில் நீயன்றோ? (2)

வாரிக் கொடுக்கின்ற மாரி என்றாகி
பாரைக் காக்கின்ற தாயன்றோ?