(மறு) அவதாரம் எடுத்து வா சாயி !

ஸ்ரீ வைத்யநாத சாய் கீர்த்தனை
———————————-
ராகம்:கமாஸ் தாளம்: ஆதி
————
பல்லவி
————
அவதாரம் எடுத்து வா சாயி ! – மறு
அவதாரம் எடுத்து வா சாயி !
அவனியைக் காக்க, அல்லல்கள் தீர்க்க…
(அவதாரம்)
அனுபல்லவி
—————
சிவ(ன்)தாரம் அம்பிகையைப் போலே
தாராள கருணை உளம் கொண்டவன் நீயே !
(அவதாரம்)
சரணம்
———-
பிணி வந்து பயம்காட்டும் போது…
உனையின்றி எமக்கபயம் தந்திடுவார் ஏது? (2)
ஸ்ரீ வைத்யநாத சாய் ! தன்வந்திரி பாபா !
வையகம் காத்திடவே, தருணம் இது வா வா !
(அவதாரம்)