psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

பெரிய திருவடி சரணம் சரணம் !

🕉️ கருடன்
Originals

🎵 Watch/Listen on YouTube


அழகு சிறகனே ! மோகனனே !
அச்சுதன் ஹரியின் வாகனனே !
கருணை மழை பொழியும் கார்முகிலே !
கருட பகவானே வணங்குகிறேன் !

கோரஸ்:
பெரிய திருவடி சரணம் ! சரணம் !
பெருமாள் திருவடி சரணம்  (2)

 
Charanam 1
—————–

அடிமைத்தனம் நீக்கி அன்னையை மீட்க..
அமிர்தம் கொணர்ந்து நீ தந்தாயே !
அடிகள் தொழுகின்ற அடியவர்க் கெல்லாம்
அமிர்தன் என்றாகி வந்தாயே ! (2)

பறவை உருவாகப் பரந்தாமனின்
பதங்களைத் தாங்கும் ஆழ்வாரே ! (2)

பக்தி யோடுன்னை பணிந்திடுவோர்கள்
பரம சுகத்தோடு வாழ்வாரே !

 
கோரஸ்:
பெரிய திருவடி சரணம் ! சரணம் !
பெருமாள் திருவடி சரணம்  (2)
 
Charanam 2
————————

கொடிய விஷக்கடியாய் இருந்திடும் போதும்
நொடியில் குணமாக்கும் குணவானே !
கொடியில் சின்னமாய் தானாகி..
ஹரியின் உடனிருக்கும் பகவானே !  (2)

“கருடா ! கருடா!” என்றே கரைந்தால்

வருடம் பலகூடும் ஆயுளிலே (2)

வருடும் காற்றில் மிதந்து வரும்

கருட ராஜனுன் அருளாலே…