அங்காளியே ! அம்மா அங்காளியே !

ஆடிக்காத்துல அசைஞ்சாடும் வேப்பல…
அங்காளிசூடுகிற மாலை…- எங்க
அங்காளிசூடுகிற மாலை…(2)
தங்க நகைத்தேவையில்ல – அவ
மின்னிடுவாவேம்பினில..! (2)
தங்க மகதேருல..
தொங்குகிறமாவில..
அம்மனுக்குஅதுவேப்பில…! (2)
மூணுகண்ணனாம் சிவசாமி ஆகுமே…
அங்காளிஏந்துகிற சூலம் – எங்க
அங்காளிஏந்துகிற சூலம் ! (2)
தப்புசெஞ்சா பாய்ஞ்சிடுமே ! – அவ
தஞ்சமுன்னாகாத்திடுமே ! (2)
சக்தி அவசக்திய..
சொல்லுகிறஆயுதம்..
அம்மனவசூலாயுதம்…! (2)
மாரிகுடையாய் ஒய்யாரம் காட்டுமே..
அங்காளிதலைமேல நாகம் ! – எங்க
அங்காளிதலைமேல நாகம் ! (2)
அஞ்சு தலநாகமாகுமே ! – அது
அஞ்சுதலைநீக்குமே! (2)
மண் நெறஞ்சபுத்துல..
கொட்டுகிறபாலுல…
மனம்நெறையும்நாகம்மனே ! (2)
ஆகா !மஞ்சளாய் சிங்காரம் கூட்டுமே…
அங்காளிசூடுகிற சேல..! – எங்க
அங்காளிசூடுகிற சேல..! (2)
மஞ்ச நெறம்மாங்கல்யமே ! – நம்ம
நெஞ்சமதைஅது ஈர்க்குமே ! (2)
மண மணக்கும்மஞ்சள..
தினம்பூசும் பெண்கள…
அம்மனவகாப்பாத்துவா ! (2)
பாயும்சிங்கமே கம்பீரம் கூட்டுதே..
அங்காளிஏறுகிற தேரு ! – எங்க
அங்காளிஏறுகிற தேரு ! (2)
சிங்கம் அவவாகனமே ! – அவ
ஏறி வந்தாஅழகாகுமே ! (2)
சிங்கமதன்மீதிலே..
சிங்கம் போலவீரமா….
அம்மனவஊர்கோலமா ! (2)