psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !

🕉️ ஸ்ரீ ஆதிசங்கரர்
Originals

🎵 Watch/Listen on YouTube


ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !
அத்தனையும் பெரும் அற்புதங்கள் ! (2)
வேண்டி இறைவனை பாடிடவே
பக்தி வடிவான அஸ்திரங்கள் !

செல்வ வளமது கொழித்திடவே…கனகதாரா ஸ்தோத்திரம் !
அல்லல்தரும் பிணி அழிந்திடவே..வைத்யநாத அஷ்டகம் ! (2)
வில்வதளமதை சமர்ப்பணம் செய்யும் வில்வா அஷ்டகம்..
சொல்லி வந்தால் மூன்று ஜென்ம பாவம் யாவும் தீர்ந்திடும் !

திருமணம் சுபமாய் கைகூட பவானி புஜங்கமே…!
உள்மனம் அமைதியைக் கண்டிடவே நிர்வாண ஷட்கமே ! (2)
தடைகளை உடைத்து வெற்றிபெற ஸ்ரீகணேச பஞ்சரத்னம் !
கடைசியில் முக்தியை நாம்பெறவே விஷ்ணு ஷட்பதி ஸ்தோத்திரம் !