ஷீரடி சிவனே!

Listen to the song in Youtube
பல்லவி
————
அந்த ஷீரடி சிவனாய் வந்தானே ! – அவன்
‘அல்லா மாலிக்’ என்றானே !
மத பேதமில்லை அவன் சன்னதியில்…
மஹ ராஜன் சாயி மன்றமதில் ! (2)
சாய் குரு நாமமே சாஸ்வதமே ! – நம்
சாய் திரு பாதமே சொர்க்கமுமே ! (2)
சரணம் – 1
——————
அன்பைச் சுமந்து வரும் அன்பர் நெஞ்சங்களை.. – அவன்
நீ யார் என்று கேட்பதில்லை !
தன்னைத் தஞ்சமென வரும் பக்தர்களை…- ஒரு
போதும் அவன்கை விடுவதில்லை !
ஏழை என்ன? பணக்காரன் என்ன? – அவன்
வாசல் வருபவன் வீழ்வதில்லை !
எந்த சமயத்தவர் எந்த சமயத்திலும் – அவன்
முன்னே சமமே வேறு இல்லை !
சாய் குரு நாமமே சாஸ்வதமே ! – நம்
சாய் திரு பாதமே சொர்க்கமுமே ! (2)
(அந்த ஷீரடி சிவனாய்)
சரணம் – 2
—————–
சிலர் பொருள் கொடுப்பார் ! சிலர் ஏதும் தரார்..! – அவன்
ஏன்என எதுவும் கேட்பதில்லை!
சிலர் பொருள் கேட்பார் ! சிலர் அருள் கேட்பார் ! – அவன்
என்றும் இல்லை என்றதில்லை !
வானம் என்ன? இந்த பூமி என்ன? – அணுத்
தூளும் அவனன்றி அசைவதில்லை !
அன்பில் அன்னையென நம் குருவுமென – அவன்
போலே வேறு யாருமில்லை…!
சாய் குரு நாமமே சாஸ்வதமே ! – நம்
சாய் திரு பாதமே சொர்க்கமுமே ! (2)
(அந்த ஷீரடி சிவனாய்)