வேலுண்டு ! பயம் இல்லை !
வேலுண்டு ! மயிலும் உண்டு !
வேலோனின் துணையும் உண்டு !
ஏதும் பயம் இல்லையே !
எல்லாம் ஜெய மாகுமே ! (2)
கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே !
கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2)
கோரஸ்:
கந்த வடிவேலனே !
செந்தில் குருநாதனே !
மதியுண்டு ! மனமும் உண்டு !
மதிபோன்ற முகமும் உண்டு !
முருகன் அருள் போதுமே !
கருணை மழை யாகுமே ! (2)
கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே !
கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2)
கோரஸ்:
கந்த வடிவேலனே !
செந்தில் குருநாதனே !
அழகான தமிழும் உண்டு !
அதுபாட அழகன் உண்டு !
பாடிக் கொண்டா டுவோம் ! (2)
கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே !
கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2)
கோரஸ்:
கந்த வடிவேலனே !
செந்தில் குருநாதனே !
கொடி உண்டு ! சேவல் உண்டு !
வடிவேலன் காவல் உண்டு !
வாழ்க்கை வளமாகுமே !
கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே !
கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2)
கோரஸ்:
கந்த வடிவேலனே !
செந்தில் குருநாதனே !
தைமாசப் பூசமுண்டு !
தயவாகும் முருகனுக்கு..
பழனி மலை நாடுவோம் !
கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே !
கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2)
கோரஸ்:
கந்த வடிவேலனே !
செந்தில் குருநாதனே !