திருவிளக்கு பூஜை செய்தோம் !

திருவிளக்கு பூஜை செய்தோம் ! திருமகளே வருக !
திருவிளக்கின் ஒளியினைப் போல் வாழ்வில் ஒளி தருக ! (2)
(திருவிளக்கு)
திருவிளக்கே தேவிஉந்தன் திருவுருவாய் பாவித்து (2)
கருத்துடனே அழகான அலங்காரம் செய்வித்து…(2)
நல்லெண்ணெய் ஊற்றி, நல்ல பஞ்சு திரி போட்டு (2)
பஞ்சமுகம் தீபமேற்றி திவ்யமாக ஒளிரும்படி
(திருவிளக்கு)
வீடு தோறும் கோலமிட்டு தோரணங்கள் ஆட விட்டு..
கூடிபல சுமங்கலியர் பக்தியுடன் பாடிக் கொண்டு…
நெற்றியிலே மங்கலமாய் குங்குமமும் இட்டு…
வெற்றி தரும் சௌபாக்யம் அருளிடவே வேண்டிமென்று…