வருது ! வருது ! பூசத்தேரு !
வருது ! வருது ! பூசத்தேரு வருகுது !- பக்தர்
கூட்டமென்னும் கடலதுவின் அலையிலே ! (2)
பாசமிகு சாமி!
பழனிமலை சாமி..
ஊர்கோல மாக வருகிறான் ! – தேரில்
ஊர்கோல மாக வருகிறான் ! (2)
பவனி வரும் முருகன் பாட்டு பாடுங்க ! – உங்க
மனமிருகி வேண்டிகிட்டு கோஷம் போடுங்க ! (2)
கோரஸ்:
அரோகரா சொல்வோம் ! ஆனந்தத்தோடு !
வரான் ! வரான் ! முருகன் ! பூமுகத்தோடு ! (2)
ஆடி அசஞ்சாடி வரும் தேருங்க ! – அத
வடமிழுக்க கோடி கோடி பேருங்க !
தேடினாலும் எங்கும்
கிடைச்சிடாத காட்சி !
பெருமானின் பேரச் சொல்லுங்க ! – பழனி
பெருமானின் பேரச் சொல்லுங்க !
பேரச் சொன்னா நாவினிக்கும் ! நல்லது நடக்கும் ! – நம்ம
பேரழகன் மகிமையாலே மங்கலம் பொறக்கும் ! (2)
கோரஸ்:
அரோகரா சொல்வோம் ! ஆனந்தத்தோடு !
வரான் ! வரான் ! முருகன்! பூமுகத்தோடு ! (2)
வீதியெலாம் ஆட்டம் பாட்டம் பாருங்க ! – வான
வேடிக்கைகள் விதவிதமா காணுங்க !
அரோகரா கோஷம் !
அதையும் தாண்டி கேட்கும்!
பல கோடி பக்தர் குரலிலே ! – கூடும்
பல கோடி பக்தர் குரலிலே !
கோஷம் போட கோஷம் போட பாவம் தீருமே ! – நம்ம
தோஷமெல்லாம் நீங்கி நம்ம வாழ்வு சிறக்குமே ! (2)
அரோகரா சொல்வோம் ! ஆனந்தத்தோடு !
வரான் ! வரான் ! முருகன்! பூமுகத்தோடு ! (2)
காவடிகள் பால் குடங்கள் பாருங்க ! – முருகன்
சேவடியைப் பாடிவரும் பாருங்க !
நேர்த்திக் கடன் தீர..
ஏந்தி வரும் அடியார்
பார்த்தாலே தெய்வீகமே ! – அழகன்
பரமேசன் தேவாம்சமே !
காவடியைத் தூக்கி வந்தா அவனுக்கு பிடிக்கும் ! – நம்ம
கார்த்திகேயன் கதிர்வேலே காரியம் முடிக்கும் ! (2)
அரோகரா சொல்வோம் ! ஆனந்தத்தோடு !
வரான் ! வரான் ! முருகன்! பூமுகத்தோடு ! (2)
சூரியனும் உதயமிங்கு ஆனதோ? – அந்த
சந்திரனும் தரையிறங்கி வந்ததோ !
வெற்றி வடி வேலன்.. ! – கண்
மின்ன வரும் கோலம்…!
பார்த்திடகண் கோடி வேண்டுமே ! – அழகை
பார்த்திடகண் கோடி வேண்டுமே !
வேல்முருகன் தேரில் வரும் காட்சி இனிக்குது ! – அதை
நாள் முழுக்க பார்த்திருக்கும் ஆசை இருக்குது! (2)
அரோகரா சொல்வோம் ! ஆனந்தத்தோடு !
வரான் ! வரான் ! முருகன்! பூமுகத்தோடு ! (2)