psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா ஞானம் தா !

🕉️ விஷ்ணு / திருமால் ஸ்ரீ ஹயக்ரீவர்
Originals

🎵 Watch/Listen on YouTube


பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்…
பரிட்சையில் வெற்றி எளிதாகும் !

பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்…
பரிட்சையில் வெற்றி எளிதாகும் !

கல்விச் செல்வத்தின் அதிபதி திருச் செல்வன் ! (2)
வல்வினை  தீர்த்திடும் ஸ்ரீ லட்சுமி ஹய க்ரீவனவ‌ன்! (2)

கோரஸ்:

நாராயணனே ! கோவிந்தா !
லட்சுமி ஹயக்ரீவா ஞானம் தா ! (2)

சரணம் 1
—————–
வீணை ஏந்திடும் கலைமகள் குருவானவன் !
ஆ…ஆ….
வீணை ஏந்திடும் கலைமகள் குருவானவன் !
பாரைக் காத்திடும் திருமால் உருவானவன் ! (2)
ஞானம் வேண்டியவன் த்யானம் செய்வோர்க்கு ! (2)
பூரண வரம் தருவான் ! பண்டிதன் ஆக்கிடுவான் ! (2)

கோரஸ்:

நாராயணனே ! கோவிந்தா !
லட்சுமி ஹயக்ரீவா ஞானம் தா ! (2)

சரணம் – 2
——————-
திக்கியே பேசுவோர்க்கும் தீர்க்கமாய் பேசவரும் !
ஆ…ஆ..
திக்கியே பேசுவோர்க்கும் தீர்க்கமாய் பேசவரும் !
திக்கற் றோருக்கும் தெளிவாய் வழி தெரியும் ! (2)

லட்சுமி ஹயக்ரீவன் பதம் பணிந்தோர்க்கு…(2)
லட்சியம் ஈடேறும்…நிச்ச யமாகவே ! (2)

கோரஸ்:

நாராயணனே ! கோவிந்தா !
லட்சுமி ஹயக்ரீவா ஞானம் தா ! (2)

பல்லவி
———-
பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்…
பரிட்சையில் வெற்றி எளிதாகும் !

கல்விச் செல்வத்தின் அதிபதி திருச் செல்வன் ! (2)
வல்வினை  தீர்த்திடும் ஸ்ரீ லட்சுமி ஹய க்ரீவனவ‌ன்! (2)

கோரஸ்:

நாராயணனே ! கோவிந்தா !
லட்சுமி ஹயக்ரீவா ஞானம் தா ! (2)