psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

பெரியவா தீபாவளி !

🕉️


ஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் !
———————————————-
பாடலை Youtube-ல் பார்க்க/கேட்க‌

காஞ்சி மகா பெரியவராய்
தீப ஒளி நாளிதனில்
காசி நாதன் அருளிடுவான்
எல்லோர்க்கும்…

அவர் தான் மனிதனாக மண்ணில் வந்த சிவபெருமான்…!
வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் !
வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் !

(காஞ்சி மகா)

பெரியவாளின் பொன்மொழிகள்
தேன்இனிப்பு பண்டங்கள்போல்…
நம்பி அதன் வழி நடப்போம் வாருங்கள் ! (2)

அவர் நாமமெனும்
இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் அன்பர்களே…நண்பர்களே..
வாருங்கள்..(2)

(காஞ்சி மகா)

தீய்மைமிகு எண்ணங்களின்
மன அழுக்கு ஆடையினை…
காஞ்சி மகான் களைந்திடுவார்
வாருங்கள்! (2)

புது ஆடையினைச் சூடிக்கொண்டு
சங்கரனே சொல்லுவதால்..
இன்ப வெடி சத்தம் வரும் வாழ்வோடு…(2)

(காஞ்சி மகா)

நம்மில் உள்ள தீயவகைள்
நரகா சுரன் போலழியும்…!
சங்கரரின் அருட்கரமும்
அபயமாகவே ! (2)

அவர் நம்மிடையே தெய்வமென‌
அவதரித்து வந்ததற்கு
பாக்யமென்ன செய்திருப்போம் சொல்லுங்கள் ! (2)

(காஞ்சி மகா)