psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்

🕉️


வடிவம்: புத்தகம் வருடம்: 1990 தொகுப்பு: குத்தாலம் ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் மீதான 8 (அந்தாதி) பாடல்கள் பாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிற வருடம்…எனது அன்னையார் திருமதி. தேவகி அவர்கள் உடல் நலக் குறைவினால், எங்களை விட்டு நீங்கிய கால கட்டம். குத்தாலத்தில், நாங்கள் வசித்து வந்த வீடு அமைந்த வடக்கு வீதியில் வீற்று அருள்பாலித்திருந்த ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் பெயரில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வம். எனது தந்தையார் திரு. புருஷோத்தமன் அவர்களின் ஊக்கத்தோடு, நான் எழுதிய பாடல்கள் புத்தக வடிவம் பெற்றதோடு, விநாயகர் சதுர்த்தி விழாவில், திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்களால், வெளியிடப்பட்டது. பாடல்களுக்கு எனது இசை ஆசிரியை திருமதி, கற்பகம் அவர்கள் 8 ராகங்களில் மெட்டமைத்துக் கொடுத்து ஆசி வழங்கினார் என்பதையும் குறிப்பிட விழைகிறேன். பாடல் வரிகளுக்கு…