கோதுமையில் மாவரைத்து…

கோதுமையில் மாவரைத்து..
கொடியதோர் நோய் தீர்த்த…
சத்குரு திருவடியை நாடு !
மண்ணில் வந்த தெய்வமென ஷீரடியில் வாழும்…
மன்னவன் சாயிபாபா நாமமதைப் பாடு !
(கோதுமையில் மாவரைத்து)
வெற்றிப் பயிர் செழிக்க…பக்தியதே விதையாகும்,,,
பற்றிடு குருபதத்தை சத்தியமாக…!
(வெற்றிப் பயிர்)
சக்தியினைத் தந்தருளும்…சாயி..பரம சிவம்…
இத்தரையில் வந்தது நாம் செய்த தவம்…
(கோதுமையில் மாவரைத்து)
பக்தர்கள் நினைப்பதெல்லாம்….முன்பாகவே அறிந்து…
தானாய் கேட்டருளும் மகான் சாயிதான் !
அற்புதங்கள் செய்யவந்த…ஹரியின் அவதாரம் !
கற்பகமாய் வரமருளும்…கருணைத் திருவுள்ளம் !
(கோதுமையில் மாவரைத்து)