psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

என் நிலை கூறி

🕉️


ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– என் நிலை கூறி அருள் வேண்டி உன்னிடம் வந்தேன் ! அதை சொல்கின்ற சிரமம்கூட எனக்கில்லையே ! நீயே என் நிலை சொல்லி அருளும் செய்தாய் ! நான் காணும் தெய்வமாய் கண்முன் நின்றாய் ! (என் நிலை கூறி) சரணம் – 1 வழி காட்டு என வேண்டி நானும் வந்தேன் ! – என் வழித் துணையாய் ஆகியே நீயும் வந்தாய் ! வலி நீக்கு என வேண்டி நானும் வந்தேன் ! – என் துயர் நீக்கும் மருந்தாகி நலமும் தந்தாய் ! (என் நிலை கூறி) சரணம் – 2 ஒருபோதும் மாறாத அன்பைக் கேட்டேன் ! – உனை எப்போதும் நினைக்கின்ற சிந்தை தந்தாய் ! பழிச் சொல்லே பேசாத பண்பைக் கேட்டேன் ! – உன் புகழ்பாடும் பண்தந்து பாடச் செய்தாய் ! (என் நிலை கூறி)