ॐ

psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

கொலுவிருக்க வாருமம்மா

🕉️ அம்பாள் / தேவி
Originals

🎵 Watch/Listen on YouTube


 

அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து

அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2)

அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள்

அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2)

அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து

அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து

 

MUSIC…

 

இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி கரம்…

இல்லையென்று சொல்லாமல் அ ள்ளித்தரும் பல வரம்

MUSIC

இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி கரம்…

இல்லையென்று சொல்லாமல் அ ள்ளித்தரும் பல வரம்

 

அல்லல்களைத் தீர்த்திடும் அஷ்டலட்சுமி அவதாரம் (2)

இஷ்டமுட ன் உனைவேண்ட கூடும் நலன் ஏராளம் (2)

 

அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து

அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2)

 

MUSIC…

 

குங்குமமும் மங்கலமும் தரும் மங்கலச்செல்வியே !

கலைமகள் வடிவாகி தந்திடுவாய் கல்வியே !

MUSIC…

குங்குமமும் மங்கலமும் தரும் மங்கலச்செல்வியே !

கலைமகள் வடிவாகி தந்திடுவாய் கல்வியே !

 

சிங்கத்திலே ஏறிடும் ஸ்ரீதுர்க்கை அன்னையே ! (2)

தஞ்சமது நீயெனவே நாடி வந்தோம் உன்னையே

 

அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து

அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து

அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள்

அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2)

 

அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து

அமரு

ம்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து(2)