psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

கண்ணா ! நீ வருவாயென…

🕉️ ஸ்ரீ கிருஷ்ணர்
Originals


கண்ணா ! நீ வருவாயென..காலடியாய் கோலமிட்டோம் !
காலடியின் மேலடி வைத்து…மெல்ல மெல்ல வந்திடுவாய் ! கண்ணா ! கண்ணா ! (2)

கோரஸ்:
வா ! வா ! கண்ணா !
வா ! வா ! கண்ணா ! (2)


சரணம் 1
———-
வெண்ணெய் தேடி ஆயர்பாடி வீடுதோறும் சென்றாய் !
உன்னைத் தேடி வெண்ணைய் வைத்து வேண்டுகிறோம் வா ! வா ! (2)
“குறும்பு” என்றுன் அன்னையளும் கட்டி வைத்தாள் உரலில்.. (2)
விரும்பி உன்னைக் கொஞ்சிப் பாடி கட்டி வைப்போம் குரலில்…

கோரஸ்:
வா ! வா ! கண்ணா !
வா ! வா ! கண்ணா ! (2)

சரணம் 2
அன்புடனே நண்பன் தந்த பிடிஅவலை ஏற்றாய் !
ஆசையோடு படி அளவாய் அவல் படைத்தோம் வா ! வா ! (2)
மண்ணைத் தின்ற வாய் திறந்து காட்டினாயே உலகை! (2)
உன்னைக் கண்டால் மறந்திடாதோ அக்கணமே உலகே !

கோரஸ்:
வா ! வா ! கண்ணா !
வா ! வா ! கண்ணா ! (2)

சரணம் 3
——–
படமெடுக்கும் பாம்பின் மீது நாட்டியமும் செய்தாய் !
நடனம் செய்த கால்பதித்து பைய பைய வா ! வா ! (2)
பாண்டவர்கள் பக்கம்நின்று தூதுவனாய் சென்றாய் ! (2)
வேண்டுகிறோம் எங்களின்முன் மாதவனாய் வா ! வா !

கோரஸ்:
வா ! வா ! கண்ணா !
வா ! வா ! கண்ணா ! (2)

கண்ணா ! நீ வருவாயென..காலடியாய் கோலமிட்டோம் !
காலடியின் மேலடி வைத்து…மெல்ல மெல்ல வந்திடுவாய் ! கண்ணா ! கண்ணா !

கோரஸ்:
வா ! வா ! கண்ணா !
வா ! வா ! கண்ணா ! (4)