psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

லோகவீரம் தமிழில்

🕉️ சாஸ்தா/ஐயப்பன்
Translations

🎵 Watch/Listen on YouTube


 

  1)

பார் போற்றும் பரம வீரா !

காத்து அருளும் காவல் வீரா !

பார்வதியின் இதயம் நிறைக்கும்..

சாஸ்தாவே நமஸ்காரம் !

சுவாமியே சரணம் ஐயப்பா !

 

2)

 

ஹரியின் அரனின் பிரிய மகனே !

எளிதில் வரங்கள் அருளுவோனே !

அரிய மறையோர், அகிலம் போற்றும் …

சாஸ்தாவே நமஸ்காரம் !

சுவாமியே சரணம் ஐயப்பா !

 

3)

 

நடை அதிலோ மத யானை !

மனம் அதிலோ‌ மிகும் கருணை !

தடை யாவும் நீக்கி அருளும்

சாஸ்தாவே நமஸ்காரம் !

சுவாமியே சரணம் ஐயப்பா !

 

4)

 

எங்கள் குலம் காக்கும் தேவே !

எதிரியோரை அழிக்கும் தேவே !

வேண்டும் வரங்கள் யாவும் அருளும்..

சாஸ்தாவே நமஸ்காரம் !

சுவாமியே சரணம் ஐயப்பா !

 

5)

 

கேரளத்தில் லீலை செய்யும்

பாண்ட்ய வம்ச திலகம் நீயே !

கதியிலார்க்கு தஞ்சம் அருளும்…

சாஸ்தாவே நமஸ்காரம் !

சுவாமியே சரணம் ஐயப்பா !

 

6)

 

பஞ்சரத்னம் இதை தினமும்

பக்தியோடு சொல்லி வந்தால்..

மிஞ்சும் இன்பம் கொண்டு ஐயன்..

மனதோடு குடியேறுவான்…!

சுவாமியே சரணம் ஐயப்பா !

 

7)

ஆனைமுகத்தோன் உடன் இருப்பாய்

த்ரயம்பகபுர ராஜ்யம் ஆள்வாய் !

ஆனைமீதில் ஏறி உலவும்..

சாஸ்தாவே ! குல தெய்வமே !

சாமியே சரணம் ஐயப்பா !

 

8)

 

மயில் வாகனன் சோதரனே !

மகாதேவன் ஆற்றலோனே !

துயில்மாலன் வழியாய் வந்த…

சாஸ்தாவே ! குல தெய்வமே !

சாமியே சரணம் ஐயப்பா !

 

9)

 

தந்தையாக வைத்யநாதன்

அன்னையாக தன்வந்த்ரி நாதன்

பிள்ளையாக வந்த வைத்யா !

சாஸ்தாவே ! கருணாமூர்த்தே !

சுவாமியே சரணம் ஐயப்பா !

 

10)

பூமி நாதா ! சதானந்தா !

உயிர்கள் காக்கும் கருணை ரூபா !

காக்க வேண்டும்

மகா ப்ரபுவே !

சாஸ்தாவே ! போற்றி ! போற்றி !

சுவாமியே சரணம் ஐயப்பா !