ஸ்ரீ சூர்ய அஷ்டகம்
1)
ஆதி தேவனே ! வணங்குகிறேன்! – புதுக்
காலைக் கதிரோனே வணங்குகிறேன் ! (2)
ஜோதி ஒளியோனே ! வணங்குகிறேன் ! – உன்
கருணை என்மேல் பொழியட்டும் !
2)
ஏழு குதிரையின் தேரேறி – ஒரு
வெள்ளை தாமரை கரமேந்தும்
வீறு கொண்டோனே ! காஸ்யபரின்..
வீர மைந்தனே ! வணங்குகிறேன் ! (2)
கோரஸ்:
ப்ரபாகரனே வணங்குகிறேன் ! திவாகரனே வணங்குகிறேன் !
பாஸ்கர தேவனே வணங்குகிறேன் !
பானு சூர்யனே வணங்குகிறேன் ! (2)
3)
லோகம் யாவைக்கும் மூத்தவனே ! – ஒரு
தேரில் வலமாகும் செந்நிறனே ! (2)
பாவம் தனைதீர்க்கும் சூரியனே ! – உன்
பாதம் பணிந்தே வணங்குகிறேன்!
4)
ஈசன், விஷ்ணு, ப்ரம்மனவன் – முக்
குணங்களும் ஒன்றாய் ஆனவனே !
வீசும் சுடராலே பாவங்கள் – அதை
விரட்டும் தேவனே வணங்குகிறேன் ! (2)
கோரஸ்:
ப்ரபாகரனே வணங்குகிறேன் ! திவாகரனே வணங்குகிறேன் !
பாஸ்கர தேவனே வணங்குகிறேன் !
பானு சூர்யனே வணங்குகிறேன் ! (2)
5)
வீரிய ஆற்றல் கொண்டோனே ! – அந்த
வானம், காற்றுபோல் பரந்தோனே ! (2)
சூரிய தேவனே ! மூவுலகும்
ஆளும் நாதனே ! வணங்குகிறேன் !
6)
ஒற்றை சக்கரம் தரித்தோனே !
செந்நிற மலர்போல் எழிலோனே !
சுற்றி மாலையும், குண்டலமும்
சூடும் தேவனே வணங்குகிறேன் ! (2)
கோரஸ்:
ப்ரபாகரனே வணங்குகிறேன் !
திவாகரனே வணங்குகிறேன் !
பாஸ்கர தேவனே வணங்குகிறேன் !
பானு சூர்யனே வணங்குகிறேன் ! (2)
7)
தரும் ஆற்றலால் அகிலமெலாம்
ஆட்டி வைத்திடும் ஜோதியனே ! (2)
பெரும் பாவமும் தீர்ப்போனே !
பகலவா ! பணிந்தே வணங்குகிறேன்!
8)
மாயத் திரைவிலக்கும் மெய்ஞ்ஞானம் – அதை
வார்க்கும் சகமிதன் அதிபதியே !
தீய பாவங்கள் தீர்த்தருளும்…
ஞான ஒளியோனே வணங்குகிறேன்! (2)
கோரஸ்:
ப்ரபாகரனே வணங்குகிறேன் !
திவாகரனே வணங்குகிறேன் !
பாஸ்கர தேவனே வணங்குகிறேன் !
பானு சூர்யனே வணங்குகிறேன் ! (2)