psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

நிழலாய் வந்த ஒளி

🕉️ ஸ்ரீ ஜெயேந்திரர்
Originals


 

கல்ப வ்ருட்சமாம் காஞ்சியின் மாமுனி !

கழலடி நிழலாய் வந்த பேரொளி !

தர்ம சாஸ்திரம், நான்மறை சொல்படி

தரணியில் வாழ்ந்தஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி !

 

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !

ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக !

 

 

ஆதி சங்கரர் நிறுவிய ஸ்தாபனம் !

மஹா பெரியவா அருளிய ஸ்ரீமடம் !

ஜோதி விரிந்தது புவியினில் நாற்புறம் !

ஒளியினைத் தந்த ஜெயேந்த்ரர் அருட்கரம் !

 

 

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !

ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக !

 

 

பாட சாலைகள் திறந்தன புதிதாய்..

வேத கோஷங்கள் கலந்தது காற்றாய்.

தேக நலனைக் காத்திடும் வழியாய்

மருத்துவ மனைகள் வந்தன பெரிதாய் !

 

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !

ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக !

 

ஞான ரூபமாம் ஸ்வாமிகள் திருமுகம்

நெஞ்சை நீங்குமோ ஆண்டுகள் ஆயினும்..

ஞாலம் போற்றிடும் ஸ்ரீகுரு திருப்பதம் !

நாளும் பாடுவோம் சர்வமும் சங்கரம் !

 

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !

ஜெயேந்த்

ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக !