ஸ்ரீ ராம் பஞ்ச ரத்னம் தமிழில்
1.
கண்கள் தாமரை மடல் போலே
குண்டலம் மின்னும் காதினிலே
குலமென உதித்ததோ ரகுவம்சம்..(2)
குணத்திலே கருணையின் மறுஅம்சம் !
லட்சுமணன் உடனுறை ஸ்ரீராமா (2)
வந்தனம் ! செய்கிறேன் நானுனக்கு ! (2)
chorus:
ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெய ராம் !
ஸ்ரீராம் ! ஜெயராம் ! சீதா ராம் !
2.
மின்னல் வெட்டிய கார் முகில் போல்
மின்னும் எழில் உரு கொண்டவனே !
விண்ணவர் போற்றும் நற்குணனே! (2)
வீரனே ! பகையினை அழிப்பவனே !
லட்சுமணன் உடனுறை ஸ்ரீராமா (2)
வந்தனம் ! செய்கிறேன் நானுனக்கு ! (2)
chorus:
ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெய ராம் !
ஸ்ரீராம் ! ஜெயராம் ! சீதா ராம் !
3.
ஆழியின் ஆணவம் தோற்பதுபோல்
ஆயுதம் பலவாய் கொண்டவனே !
வானரன் சுக்ரீவன் சிநேகிதனே ! (2)
வானவர் பகையினை வென்றவனே !
லட்சுமணன் உடனுறை ஸ்ரீராமா
வந்தனம் ! செய்கிறேன் நானுனக்கு ! (2)
chorus:
ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெய ராம் !
ஸ்ரீராம் ! ஜெயராம் ! சீதா ராம் !
4.
சரணென வந்தார்க்கு அம்மைநீ!
பதம்தனை பணிவார்க்கு அப்பன்நீ !
பொன்நிற ஆடையில் ஒளிர்பவனே ! (3)
இந்திரன், தேவரும் தொழுபவனே !
லட்சுமணன் உடனுறை ஸ்ரீராமா (2)
வந்தனம் ! செய்கிறேன் நானுனக்கு ! (2)
chorus:
ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெய ராம் !
ஸ்ரீராம் ! ஜெயராம் ! சீதா ராம் !
5.
சந்திர முகத்தனே ! வணங்குகிறேன் !
சூரிய வம்சனே ! வணங்குகிறேன்!
லட்சுமணன் உடனுறை ஸ்ரீராமா ! (2)
வணங்கினேன் ! வணங்கினேன் மறுபடியும் !
லட்சுமணன் உடனுறை ஸ்ரீராமா ! (2)
வணங்கினேன் ! வணங்கினேன் மறுபடியும் ! (2)
chorus:
ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெய ராம் !
ஸ்ரீராம் ! ஜெயராம் ! சீதா ராம் !
6.
பஞ்சரத்னமாம் துதியிதனை
அனுதினம் மும்முறை சொல்
வார்க்கு
பாவங்கள் யாவும் தீர்ந்திடவே..
பரமனின் பதங்களை அடைவாரே !