psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மங்களாஷ்டகம் தமிழில்

🕉️ ஸ்ரீ முருகன்
Translations

🎵 Watch/Listen on YouTube


 

1

மந்தார மலர்விரும்பும் நாதனே !

மயில்மீது ஏறி வரும் தேவனே !

சிவநாதன் பாசமிகு புத்திரனே !

சுப்ரமணிய சுவாமியே ! மங்களமாகட்டும் !

2.

பக்தர்களின் விருப்பங்களை அளிப்பவனே !

பிறவிப்பிணி தீர்த்தருளும் தேவனே !

ராஜாதி ராஜர் தொழும் ராஜனே !

சமர் வீரனானவனே! மங்களமாகட்டும் !

3.

தாரகனை வதமுடித்த தீரனே!

சூரபத்மன் குலமழித்த சூரனே !

பாலகனின் வடிவில் வந்த வீரனே !

சுப்ரமணிய சுவாமியே ! மங்களமாகட்டும் !

4.

மலர்த்தேனை சுற்றிவரும் வண்டுபோல்

மலர்முகத்தாள் வள்ளியினை நாடுவாய்!

பலபலவாய் ரத்தினங்கள் பொதித்ததால்..

பளபளக்கும் மகுடனே ! மங்களமாகட்டும் !

5.

கோடிகோடி காமனையும் விஞ்சிடும்

பேரழகில் ஒளிருகின்ற சுந்தரா !

நாடியவர் விரும்பியவைத் தந்திடும் ..

வஜ்ராயுத பாணியே ! மங்களமாகட்டும்

6.

முக்தியினைத் தந்தருளும் குமரனே !

முத்துமாலை மின்னுகின்ற மார்பனே !

தேவயானை உடனுறைய மகிழ்ந்திடும்

தேவதேவன் ஆனவா ! மங்களமாகட்டும் !

7.

ஜொலிக்குமாடை இடையினோடு பூண்டவா !

கலியின் துயர் தீர்த்தருளிக் காப்பவா !

மாலவனும் வணங்குகின்ற ஆண்டவா !

கார்த்திகேயனானவா ! மங்களமாகட்டும் !

8

சந்திரன்போல் தண்மயத்து முகத்தனே!

மங்கலங்கள் தந்தருளும் தேவனே !

சர வனத்தில் தோன்றிவந்த சூரனே !

சரணடைந்தார் காவலே ! மங்களமாகட்டும் !

9

அஷ்டகமாம் துதியிதனை தினமுமே

இஷ்டமுடன் ஓதிடுவார் யாவரும்..

நலங்களெல்லாம் பெற்று புகழ் ஓங்குவார் !

சுப்ரமணிய சுவாமியின் திருவருளாலே…