psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ சூரியநாராயண சுப்ரபாதம் தமிழில்

🕉️ ஸ்ரீ சூர்யபகவான்
Translations

🎵 Watch/Listen on YouTube


திசைகளாம் கிழக்கிலும், மேற்கிலும் சஞ்சாரம் செய்பவனே !

அசைந்திடும், அசையாதிருக்கும் உயிர்களைக் காப்பவனே !

ஸ்ரீ சூர்ய நாரயணனே ! உலகநலன் காக்கவே எழுந்தருள்வாய் !

 

ஆறிரு ஆத்மனே ! மங்கலத்தின் திருத்தோற்றமே !

ஏழு குதிரைகள் தேரேறி உலகெலாம் பவனி வருபவனே !

மும்மூர்த்தியர் திருவுருவே ! மூவேளையும் தொழத்தக்கவனே !

திவாகரன் என்னும் ஸ்ரீ சூர்ய தேவ பகவானே !

திருக்கண் மலர்ந்தருள்வாய்!

 

அஞ்ஞான இருள்தன்னை விரட்டுவோனே !

மெய்ஞான ஒளியாலே உலகத்தை வளர்ப்பவனே !

ஞானமுடன், ஆரோக்யம், சௌபாக்யம் அருள்பவனே !

பானுதேவன் என்னும் ஸ்ரீ சூர்ய தேவ பகவானே !

திருக்கண் மலர்ந்தருள்வாய்!

 

தங்கமயமாக ஜொலிப்பவனே ! துயர்களைந்து காப்பவனே !

சிம்மராசிக்கு அதிபதியே ! தூயவனே !பாவங்கள் அழிப்பவனே !

மானிடர் செயல்களுக்கெல்லாம் சாட்சியாய் திகழ்பவனே !

சாயா தேவியின் மனம்கவர் துணையோனே!

ஸ்ரீ சூர்ய தேவ பகவானே ! திருக்கண் மலர்ந்தருள்வாய்!