மணி நூபுர தாரி
மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமியின் மீது ஊத்துக்காடு வேங்கடகவியின் நீலாம்பரி ராக கீர்த்தனை – தமிழில் பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக…
*************
பல்லவி
மணிசதங்கை சூடும்…
மணிசதங்கை சூடும்…ராஜகோபாலா
மணிசதங்கை காலில்…ராஜகோபாலா
கிணிகிணி எனக் குலுங்க..
கங்கணம் கரத்தினில் சிணுங்க..
மணிசதங்கை சூடும்…ராஜகோபாலா
மணிசதங்கை காலில்…ராஜகோபாலா
கிணிகிணி எனக் குலுங்க..
கங்கணம் கரத்தினில் சிணுங்க..
அனுபல்லவி
மணி கோமேதகம், பவளம் வைடூரியம்
மரகத பேரொளி போலொளிர் மேனி..
மரகத பேரொளி போலொளிர் மேனி..
எழிற்குழல் அழகினை கூட்டுமே மகுடம்!
மிளிரும் மேனியில் ஒளிர் ஆபரணம்
சரணம்
மலையா மலைவளர் சந்தனத்தோடு..
மணக்கும் கஸ்தூரியும் உடற் பூசி…
திலகம் ஒளிர்நெற்றி..வாசனை வீச…
உலகம் மூன்றிலும் ஒளி வீச….
கார்முகில் போல்வண்ண கருநிற பாலா..
சுவாமி ஸ்ரீ ராஜ கோபாலா…
நெற்றியில் ஆடிடும் எழிலா பரணம் !
தமால மலர்போல் பொன்நிற கன்னம் !
காளிங்கன் மீது ஆடிய பாதா…
காருண்ய பாலா ! கோபியர் லீலா !
மலையா மலைவளர் சந்தனத்தோடு..
மணக்கும் கஸ்தூரியும் உடற் பூசி…
திலகம் ஒளிர்நெற்றி..வாசனை வீச…
உலகம் மூன்றிலும் ஒளி வீச….
கார்முகில் போல்வண்ண கருநிற பாலா..
சுவாமி ஸ்ரீ ராஜ கோபாலா…
நெற்றியில் ஆடிடும் எழிலா பரணம் !
தமால மலர்போல் பொன்நிற கன்னம் !
காளிங்கன் மீது ஆடிய பாதா…
காருண்ய பாலா ! கோபியர் லீலா !