ஸ்ரீ அபிராமி ஸ்தோத்திரம் தமிழில்
1)
ரத்ன சிம்மாசனம்
அதிலமர்ந் தொளிரும்
லலிதா தேவியே ! வந்தனங்கள்!
பக்தரின் தேவைகள் தந்தருள் செய்திடும்
அபிராமி தாயே ! வந்தனங்கள்!
2)
குண்டலம் வீசி
முழு நிலவாக்கி (2)
பௌர்ணமி செய்தாய் நீஅன்றே !
அண்டத்தின் தாயே ! நீளாயுள் அருள்வாய் !
அபிராமி தாயே ! வந்தனங்கள்!
3)
அமிர்த கடேஸ்வர்
அவர்துணை யாளே !
சரணடைந்தாரைக் காக்கும் தேவி !
என்றும் நிரந்தர ஆரோக்யம் தருவாய் !
அபிராமி தாயே ! வந்தனங்கள்!
4)
ஜகமிதில் மங்கல காரணி நீயே ! (2)
மங்கலம் அருள்வாய் ! கல்யாணி !
சகல செல்வங்கள் அருளிடுவாய்நீ ! (2)
அபிராமி தாயே ! வந்தனங்கள்! (2)
5)
சந்திர மணடலம்
நடுவினில் உறையும்
திரிபுர சுந்தரி தாயே சரணம் !
சுந்தரமாக ஸ்ரீசக்ரம் அதிலுறை (2)
அபிராமி தாயே ! வந்தனங்கள்! (2)
6)
பூரண நிலவாய்
ஒளிர்ந்திடும் தேவி !
தாமரை மலர்க்கண் கொண்டவளே !
பூரண சௌபாக்யம் தந்தருள்வாயே ! (2)
அபிராமி தாயே ! வந்தனங்கள்! (2)
7)
மறைகளின் வடிவே !
செல்வத்தின் திருவே !
கரிமுகன், அறுமுகன் அன்னையளே ! (2)
குறைவிலாப் புகழுடன் ஞானமும் அருள்வாய் ! (2)
அபிராமி தாயே ! வந்தனங்கள்! (2)
8)
களங்க மிலாத
பெண்களை விரும்பும்
மங்கலம் பெருக்கும் தாய்நீயே !
நலங்களை என்றென்றும் அருளிடுவாயே ! (2)
அபிராமி தாயே ! வந்தனங்கள்! (2)
9)
ஸ்ரீ சுப்ரமணியரும்
மார்க்கண் டேயரும்
உன்னைத் தொழுதிடும் பெரும்பக்தர் ! (2)
ராஜ ராஜேஸ்வரி அதுவும் நீயே !
அபிராமி தாயே ! வந்தனங்கள்!
10)
மங்கல வடிவே !
எழுந் தருள்வாயே!
எந்தன் பூஜையில் படைப்பதை ஏற்று ! (2)
குங்குமம், தீபம், மலர்கள், மஞ்சள் (2)
இவற்றில் எல்லாம் நீதோன்று !
11)
அபிராமிதாய் முன்
துதியிதை சொன்னால்..
கைமேலாக கிடைத்திடும் பலனே !
நீளாயுள், புகழும், சௌபாக்யங்களும்
(2)
இன்பமும் சேரும் நிச்சயமாய் ! (2)