லிங்காஷ்டகம் தமிழில்

1)
மால்,அயன்,தேவரும் வணங்கிடும் லிங்கம் !
மாசிலா தூயதாய் ஒளிர்ந்திடும் லிங்கம் !
பிறவியின் இன்னல்கள் அழித்திடும் லிங்கம் !
போற்றிநான் பணியும் சதாசிவ லிங்கம் !
2)
தேவர்கள், முனிவர்கள் தொழுதிடும் லிங்கம் !
ஆசைகள் எரித்திடும் கருணா லிங்கம் !
ராவணன் அகந்தையை அழித்ததாம் லிங்கம் !
போற்றிநான் பணியும் சதாசிவ லிங்கம் !
3)
வாசனை திரவியம் பூசிடும் லிங்கம் !
ஞானத்தை வளர்த்திடும் காரண லிங்கம் !
சித்தரும், அசுரரும் வணங்கிடும் லிங்கம் !
போற்றிநான் பணியும் சதாசிவ லிங்கம் !
4)
பொன்மணி, ரத்தினம் சூடிய லிங்கம் !
பிண்ணிய நாகத்தில் மின்னிடும் லிங்கம் !
தட்சனின் வேள்வியை அழித்ததாம் லிங்கம் !
போற்றிநான் பணியும் சதாசிவ லிங்கம் !
5)
சந்தனம், குங்குமம் பூசிய லிங்கம் !
தாமரை மாலையில் மிளிர்ந்திடும் லிங்கம் !
முந்தைய வினைகளை தீர்த்திடும் லிங்கம் !
போற்றிநான் பணியும் சதாசிவ லிங்கம் !
6)
தேவ கணங்களும் பணிந்திடும் லிங்கம் !
தூய மெய்பக்தியை காட்டிடும் லிங்கம் !
ஆதவன் ஆயிரம் போலொளிர் லிங்கம் !
போற்றிநான் பணியும் சதாசிவ லிங்கம் !
7)
எண்தள மலர்மடல் சூழ்ந்ததாம் லிங்கம் !
எல்லா உயிர்க்கும் காரண லிங்கம் !
எண்வகை வறுமைகள் ஒழித்திடும் லிங்கம் !
போற்றிநான் பணியும் சதாசிவ லிங்கம் !
8)
தேவரின் தேவரும் தொழுதிடும் லிங்கம் !
தேவ லோகப்பூ அர்ச்சிக்கும் லிங்கம் !
சத்திய மெய்ப்பொருள் ஆனதாம் லிங்கம் !
போற்றிநான் பணியும் சதாசிவ லிங்கம் !
லிங்காஷ்டகம் இதை ஈசன் திரு
ச் சன்னதியில் ஓதிடுவார்….
சிவனடியை சேர்ந்திடுவார் !