psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

க்ஷேத்ரபாலபுரம் ஆனந்த பைரவர்

🕉️ ஸ்ரீ காலபைரவர்
Originals

🎵 Watch/Listen on YouTube


பல்லவி
———-
க்ஷேத்ரபாலபுரம் என்னும் க்ஷேத்திரம்..- அங்கு
ஆனந்த பைரவரின் சன்னிதானம்..! (2)

தாமரை மலர்போல் மலர்ந்த முகம்..
தாமரை மலர்மேல் அமர்ந்த சிவம் (2)

ஆனந்த கால பைரவம் – சிவ
ஆனந்த கால பைரவம்

சரணம் 1
———————-
காசிக்கு நிகரான புண்ய தலம்…
கங்கைக் கிணையான பஞ்ச தீர்த்தம்…(2)

இந்திரன், ப்ரம்மன், நவக்ரகம்
வந்து வணங்கிய திருத்தலம்.. (2)

எங்கும் இலாத ஆனந்த பூமுகம்..
கண்டு வணங்கிட பூக்கும் மனம்..
 
க்ஷேத்ரபாலபுரம் என்னும் க்ஷேத்திரம்..- அங்கு
ஆனந்த பைரவரின் சன்னிதானம்..! 
 
சரணம் 2
——-

கால பைரவரே மூலவராய்
ஆலயம் கொண்டது இத்தலமே ! (2)

அஷ்டமி நாளிலே கோயிலிலே
அலையென மோதும் கூட்டமே (2)

எண்ணெய் விளக்கினை ஏற்றி வைத்திட
பில்லி, சூனியங்கள்..ஓடிடுமே ! (2)

க்ஷேத்ரபாலபுரம் என்னும் க்ஷேத்திரம்..- அங்கு
ஆனந்த பைரவரின் சன்னிதானம்..! 

தாமரை மலர்போல் மலர்ந்த முகம்..
தாமரை மலர்மேல் அமர்ந்த சிவம் (2)

ஆனந்த கால பைரவம் – சிவ
ஆனந்த கால பைரவம்