ॐ

psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அஷ்டகம் அந்தாதி

🕉️ அம்பாள் / தேவி ஸ்ரீ சரஸ்வதி
Originals

🎵 Watch/Listen on YouTube


 

Naattai

1) நற்கலைகள் தந்தருளி

   நிலமாளும் கலைவாணி !

அற்புதங்கள் படைப்பவளே !

  அருள்பொங்கும் உன்மேனி!

 சொற்றொடரால் அடிக்கிடினும்

  சொல்லிடுமோ உன்னழகை? (2)

பொற்பாதம் இரண்டையும்நான்

   பற்றுகின்றேன் ! பற்றுகின்றேன் ! (2)

 

Mohanam

2) பற்றுகின்றேன் தாயே ! நான்

   பல்வளமும் பெற்றிடவே !

வெற்றிகளைக் குவித்திடுவாய் !

   வெண்மைஉடை பூண்டவளே !

வீற்றிருக்கும் உன்கோலம்

   வீணைகொண்ட கைகளையும் (2)

சாற்றிடவே மொழிதேடி

   தாயே! நான் அலைகின்றேன் ! (2)

 

Saraswathi

 

3) அலைகின்றேன் சரஸ்வதியே !

   அருள்வேண்டி நாள்தோறும் !

கலையெல்லாம் தந்திடுவாய் !

   கூத்தனூரில் உறைபவளே ! 

அலைமோதும் உளந்தனிலே

   அமைதியினைத் தந்திடுவாய் ! 

சிலையழகில் உனைக்கண்டேன் !

   சிலையானேன் கலைவாணி ! 

 

Malaya Marutham

4) கலைவாணி ! காப்பாய்நீ !

   அழைக்கின்றேன் ! வாவாநீ !

சிலைமேனி எழில்காணின்

   சீரழியும் வினையெல்லாம் !

மலைபோன்ற துயர்தீர்ப்பாய் !

   மாதேவி ! கலைவாணி ! 

நிலைகொள்ளா என்னெஞ்சை

   நிலையாக்க நீதுணையே !

 

Hamsanandhi

5) துணையாவாய் கலைமகளே !

   துன்பமெலாம் துயர்படவே ! (2)

தினைப்பொழுதே உன்நினைவை

  சிந்தையிலேத் தாங்கிடினும்

வினையெல்லாம் வினையுற்றே

   விரைவினிலே நீங்கிவிடும் !

தனைநாடி வந்தோர்க்கு

   துணையாகும் கூத்தனூராள் ! (2)

 

Aboghi

6) கூத்தனூரில் உறைபவளே !

   குறைகளையும் கலைமகளே !

கூத்தனவன் பாடலிலே

   கூத்திட்ட செந்தமிழே !

பூத்திடுவாய் அகமலராய்

   பண்ணிதனை இசைப்போர்பால்!

காத்திடுவாய் கலைவாணி !

   காலமெலாம் நீசரணே !

 

Sindhu Bhairavi

7) சரணடந்தேன் சரஸ்வதியே !

   சகலகலா வல்லி !

அரசலாறு எழில்குவிக்க 

   அமர்ந்தாயே கூத்தனூரில் !(2)

வரம்வேண்டிப் பாடுகிறோம்

   வேண்டுவரம் அருள்தாயே !

கரம்குவித்து வேண்டுகிறோம்

   அருள்வாயேக் கடைக்கண்ணால் !

 

Madyamavati

8) கண்களால்நீ அருட்பார்வை

   கருணையுடன் சொரிந்திட்டால்

பண்களால்நான் மாலைகட்டி

   சார்த்திடுவேன் ! கலைவாணி !

விண்கண்ட தெய்வம்பல‌

   விளங்கிடினும், புவியினிலே

கண்கண்ட தெய்வமெனில்

   கலைமகளே நீதானம்மா !(2)